தமிழில் 'முருகா' படத்தின் மூலம் அறிமுகமானவர் அசோக். அதன்பிறகு பிடிச்சிருக்கு, கோழிகூவுது, காதல் சொல்ல ஆசை, வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய், கனிகாபுரம் சந்திப்பு, கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் உள்பட பல படங்களில் நடித்தவர் தான் நடிகர் அசோக்.தெலுங்கு, மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிப்பு தனித்துவமாக இருந்தாலும் இவரின் படங்கள் பெரிதாக ஓடவில்லை.இதன் காரணமாக இவர் சின்னத்திரை பக்கம் சென்றார்.அதாவது ஜீ தமிழ் டி.வி.யில் மதியம் 1 மணிக்கு, 'மவுனம் பேசியதே' என்ற புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் அசோக், ஜோவிதா லிவிங்ஸ்டன், இரா அகர்வால், சத்யா உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அசோக் நடிக்கும் படத்திற்கான சூட்டிங்கில் காளை முட்டியதில், நடிகர் அசோக்கின் வயிற்றுப் பகுதியில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது.
வட மஞ்சு விரட்டு' படத்தில் நடித்து கொண்டிருந்த போது,முரட்டுக்காளை எதிர்பாராத வகையில் தன் பெரிய கொம்புகளால் அஷோக்கைத் தூக்கி வீசியது.நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு வயற்றுலிருந்து மார்பு வரை ஒரு கோடு காயமாக ஏற்பட்டது. இதனால் அந்தப் படப்பிடிப்பிலிருந்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனாலும் கதாநாயகன் அஷோக் தனது காயத்தைப் பொருட்படுத்தாமல் சிகிச்சைக்குப் பின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
இந்த விபத்து பற்றி பேசிய நடிகர் அஷோக், அந்த காளையின் பெயர் பட்டாணி. அது என்னுடன் நல்ல பழக்கத்தில் தான் இருந்தது. ஆனால் அதற்கு அன்று என்ன ஆனது எனத் தெரியவில்லை. என்னை தாக்கி விட்டது. ஆனாலும் இதுல அழகு என்ன தெரியுமா? பட்டாணி அதற்க்குப்பின் சோகத்தில் கண்ணீர் விட்டது. ஏதோ நம் வீட்டில் குழந்தை அடம் பிடித்த பின் அந்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிற போலவே இருந்தது.
நடிகர் அசோக் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.