கேப்டன் மில்லர் ஓடிடி உரிமத்தை வாங்க போட்டி!

Captain miller movie
Captain miller movie
Updated on

டிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தினுடைய ஓடிடி உரிமத்தை வாங்கவும், வெளியிட்டு உரிமத்தை வாங்கவும் முன்னணி நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் என்ற படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. படத்தினுடைய டீசர் சமீபத்தில் வெளியாகிய நிலையில் மூன்று கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருக்கிறது.

இந்த நிலையில் படத்தை டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர். இதற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் படத்தின் வெளியீட்டு உரிமத்தையும், ஓடிடி உரிமத்தையும் விற்பனை செய்ய முடிவு எடுத்து உள்ளது.

அதே சமயம் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் அதிக பட்ஜெட்டை கொண்ட படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் படம் மிகப்பெரிய அளவில் வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படத்தின் உரிமத்தை வாங்க முன்னணி நிறுவனங்களிடம் கடுமையான போட்டி நிலவுகிறது. குறிப்பாக ஓடிடி உரிமத்தை வாங்க முக்கிய ஓடிடி தளங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இதனால் படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய அளவில் வர்த்தகம் ஆகும் என்று சொல்லப்படுகிறது.

கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com