இளையராஜாவின் பயோபிக்கில் நடிகர் தனுஷ்!

ilayaraja and Dhanush
ilayaraja and Dhanush

இசைஞாணி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை படமாக்குவது குறித்த செய்தி நீண்ட நாட்களாகவே வைரலாகி வருகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் யாரெல்லாம் இணைகிறார்கள் இதனை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.

இசை ஜாம்பவானாக இளையராஜா:

இந்திய இசை வரலாற்றிலேயே யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் தான் இசைஞாணி இளையராஜா. 70ஸ் களில் தொடங்கி இன்று வரை அவரது இசைப்பயணத்தில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறார். இவர் 47 ஆண்டு காலமாக தமிழ் திரையுலகின் இசை பிரிவில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்து எண்ணிலடங்கா இனிமையான பாடல்களினால் சினிமா ரசிகர்களை தன்வசம் கட்டி இழுத்தவர். இவரது இந்த சாதனைகளை கௌரவிக்கும் விதமாக கடந்த 2010ம் ஆண்டு ‘பத்ம பூஷன்’ மற்றும் 2018 ம் ஆண்டு ‘பத்ம விபூஷன்’ ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

ilayaraja and Dhanush
ilayaraja and Dhanush

பயோபிக்:

இத்தகைய பேருக்கும் புகழுக்கும் சொந்தக்காரரான  இளையராஜாவின் வாழ்க்கையை மையமாக வைத்து படம் எடுக்கப்போவது குறித்து நீண்ட நாட்களாக தமிழ் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கனெக்ட் மீடியா நிறுவனத்தால் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பாக வெளிவந்தது. பின்பு இந்த படத்தை கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

மேலும் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த திரைபடத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்றும் 2025ஆம் ஆண்டு படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் அறிவித்தனர்.

ஹீரோவாக தனுஷ்:

இசைஞானி இளையராஜாவின் மிகவும் தீவிரமான ரசிகர்களுள் ஒருவர் தான் நடிகர்   தனுஷ். இவர் இளையாராஜாவின் பயோபிக்கில் நடிக்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே பேசப்பட்டு வந்தது. மேலும் அப்படத்தை பிரபல பாலிவுட் இயக்குநரான  பால்கி இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. தனுஷ் மற்றும் பால்கி ஆகிய இருவருமே இளையராஜாவின் தீவிர ரசிகர்கள் தான். எனவே இப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இளையராஜாவின் பயோபிக்கை இயக்குநர் பால்கி இயக்கவில்லை என்றும், வேறொரு இயக்குநரை இளையராஜா தேர்வு செய்து வருகின்றார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள்:
கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி..!
ilayaraja and Dhanush

இயக்குநர் யாராக இருக்கும்?

தனது வாழ்க்கை வரலாற்றை இயக்க இயக்குநர் அருண் மாதீஸ்வரனை இளையராஜா தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இது சற்றும்கூட எதிர்பாராத விஷயமாகவே உள்ளது. ஏனெனில் ஆக்ஷன் படங்களை மட்டுமே இயக்கி வந்த அருண் மாதீஸ்வரனை இளையராஜா தேர்வு செய்தது பலருக்கும் ஆச்சர்யமான விஷயமாக உள்ளது. அருண் மாதேஸ்வரனின் திரைப்படங்கள் ராக்கி, சாணி காயிதம் மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளிவந்த கேப்டன் மில்லர் போன்ற திரைப்படங்கள் வன்முறை கலந்த சிறந்த கதைகளத்தோடு அமைந்திருக்கும். மேலும் கேப்டன் மில்லர் திரைபடத்திற்கு பிறகு தனுஷ் மற்றும் இயக்குநர் அருண் மதேஷ்வரன் இணையும் இரண்டாவது திரைப்படமாக இந்த பயோபிக் அமையும். விரைவில் இதைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com