கைதி 2 அப்டேட் கொடுத்த கார்த்தி..!

Kaithi 2 Movie
Kaithi 2 Movie
Updated on

கைதி 2 படம் குறித்த அப்டேட்டை பகிர்ந்துள்ளார் நடிகர் கார்த்தி.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி படத்தில் நடிகர் கார்த்தி, நரேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் 2ஆம் பாகம் வரும் என எப்போதோ அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் இன்றளவும் காத்து கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மொத்தமே 10 படங்கள் தான் இயக்குவேன் என அறிவித்த நிலையில், இவரின் 2 வது படமான கைதி மெகா ஹிட்டடித்தது. தொடர்ந்து விஜய்யை வைத்து 2 படங்கள் இயக்கிய நிலையில் கமலை வைத்து ஒரு படம் எடுத்தார். தற்போது ரஜினிகாந்த்தின் படத்திற்காக தீவிரமாக உழைத்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: ஜோஷுவா இமை போல் காக்க!
Kaithi 2 Movie

இந்த நிலையில், கல்லூரியின் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி கைதி 2 அடுத்த வருடம் ஆரம்பமாகும் என்றும் டில்லி விரைவில் வருகிறார் என்றும் கூறி, அரங்கையே அதிர வைத்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் குறித்த அப்டேட்டை நரேன் வெளியிட்ட நிலையில் தற்போது இவரும் அறிவித்துள்ளதால் படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com