நடிகர் தனுஷ் அரசியலில் இறங்கினால் உங்கள் நிலைப்பாடு என்ன..? இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் ஓபன் டாக்.!

தனுஷ் ரசிகர் மன்ற நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜி.வி.பிரகாஷின் ஆதரவு பேச்சு வைரல்!
தனுஷ் அரசியல் வருகை
தனுஷ் அரசியல் வருகைSource:Manorama online
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால் தனது முழு ஆதரவு அவருக்கு இருக்கும் என்று இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். தனுஷின் அரசியல் வருகை குறித்த யூகங்கள் நிலவிவரும் நிலையில், அவரது நீண்டகால நண்பரான ஜி.வி. பிரகாஷின் இந்த ஆதரவு பேச்சு பெரும் பேசு பொருளாகியுள்ளது.

தனுஷ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வராத சூழலில், ரசிகர்களின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடி அறிமுகம் போன்ற நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.

நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் சமீப காலமாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தனுஷ் அதிகாரப்பூர்வமாக அரசியலுக்கு வருவது குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாத நிலையிலும் அவரது ரசிகர் மன்றத்தை சுற்றி நடக்கும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றது. இந்நிலையில் தனுஷின் நெருங்கிய நண்பரும், நடிகரும், இசையமைப்பாளமான ஜிவி பிரகாஷ் தனுஷின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தனுஷ் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக தனது சப்போர்ட் நண்பனுக்கு இருக்கும் என்று தெரிவித்துள்ளார். தனுஷும் ஜி.வி. பிரகாஷும் நீண்ட கால நண்பர்கள். தனுஷுடைய பல திரைப்படங்களில் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

Dhanush Gubera
Dhanush Gubera

தனுஷை சுற்றி தொடர்ந்து சில மாதங்களாகவே அரசியல் பேச்சு வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இது ரசிகர் மன்ற நடவடிக்கைகளுடன் மட்டுமே இருந்த நிலையில் இப்பொழுது அரசியல் கட்சி தொடங்குவது வரை சென்றுள்ளது. தனுஷ் தன்னுடைய ரசிகர் மன்றத்தை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும், ரசிகர்களை நலத்திட்ட பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி வருவதாகவும், ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் அடிக்கடி சந்திப்புகள் நிகழ்வதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையில் ரசிகர் மன்றத்திற்கான கொடியும் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது அவருக்கு அரசியல் மீதான ஆர்வத்தை காட்டுவதாகவே உள்ளதாக கூறப்படுகிறது. இது அரசியல் களத்துக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளை அவர் உருவாக்கும் முயற்சியாகவே பலரும் எண்ணுகின்றனர்.

கடந்த சில வாரங்களாகவே நடிகர் தனுஷ் அரசியலில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பரவலான பேச்சுக்கள் எழுந்துள்ளன. தனுஷின் ரசிகர் மன்றத்தினர் தங்களுக்கென அதிகாரப்பூர்வ கொடிய அறிமுகப்படுத்தியது மற்றும் மக்கள் நலத்திட்ட உதவிகளை தீவிர படுத்தியது இந்த அரசியல் யூகங்களை மேலும் வலுப்படுத்தி உள்ளது.

சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தனுஷ் ரசிகர்கள் அனைவரும் ஒற்றுமையிடமிருந்து ஏழை எளிய மக்களுக்கு அதிக அளவில் உதவிகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். தனுஷின் இந்த அரசியல் நகர்வுகள் குறித்த கேள்விக்கு, "ஜனநாயக அமைப்பில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், அதை வரவேற்கிறோம்" என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

தனுஷ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வரவில்லை என்றாலும், ரசிகர்களை நலத்திட்ட பணியில் ஈடுபட தனுஷ் சமீபத்தில் ஊக்கப்படுத்தியதே இந்த யுகங்களுக்கு காரணமாக அமைகின்றது. அத்துடன் திரையுலக நண்பர்களின் வெளிப்படையான ஆதரவு பேச்சுகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
15 நாளானாலும் காய்கறி அப்படியே ஃப்ரெஷ்ஷா இருக்கும்... இந்த 4 டிப்ஸ் மட்டும் ஃபாலோ பண்ணுங்க!
தனுஷ் அரசியல் வருகை
logo
Kalki Online
kalkionline.com