5 மொழிகளில் ரீமேக்காகும் 'பார்க்கிங்'... கடும் போட்டிக்கு பிறகு விற்பனை!

Parking movie
Parking movie

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், தற்போது இந்த படம் 5 மொழிகளில் ரீமேக்காகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பார்க்கிங்’. இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பிரார்த்தனா நாதன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒரு வாடகை வீட்டில் குடுத்தனம் இருக்கும் இரு வீட்டாருக்கு ஏற்படும் பார்க்கிங் பிரச்சனையை இயக்குனர் அழகாக காட்டியிருப்பார். கடைசியில் நடக்கும் பிரச்சனைகளில் எப்படி சமாதானம் ஆகிறார்கள் என்பது தான் கதை. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் இடையே ஏற்படும் சின்ன ஈகோ பிரச்சனை எவ்வளவு பெரிய பிரச்சனையாக மாறும் என்பது மிகவும் உணர்வு பூர்வமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சுமார் 3 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 17 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதையும் படியுங்கள்:
"200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும்" இளையராஜா நெகிழ்ச்சி!
Parking movie

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, ஓடிடியில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றது. மேலும், இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படம் 5 மொழிகளில் ரீமேக் செய்யப் பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஒரு வெளிநாட்டு மொழி மற்றும் நான்கு இந்திய மொழிகளில் பார்க்கிங் படம் ரீமேக் ஆகிறதாம்.பார்க்கிங் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஒரு சர்வதேச மொழியில் இப்படத்தை ரீமேக் செய்வதற்கான உரிமை பெரும் தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாக தெரிகிறது.

ஒரே நேரத்தில் 5 மொழிகளில் பார்க்கிங் படம் ரீமேக் செய்ய உள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com