Ilaiyaraaja
Ilaiyaraaja

"200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும்" இளையராஜா நெகிழ்ச்சி!

Published on

இசைதான் எனது மூச்சு என்றும், சென்னை ஐஐடியில் 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும் எனவும் இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் இசை ஆராய்ச்சி மையத்திற்கான அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த இசை ஆராய்ச்சி மையத்திற்கு 'IITM - Maestro Ilaiyaraaja Centre For Music Learning & Research' என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினாராகக் கலந்து கொண்ட இளையராஜா, இந்த ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார். அதுமட்டுமின்றி, இந்த இசை ஆராய்ச்சி மையத்திற்கு தனது இசைக் குறிப்புகளை மாணவர்கள் கற்றுக் கொள்வதற்காக இளையராஜா வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. திரிபுரா மாநில ஆளுநர் இந்திரசேனா ரெட்டிநல்லு மற்றும் எம்.பி.யும், இசையமைப்பாளருமான இளையராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தனர். ஒருவாரம் நடைபெற உள்ள இந்த மாநாடு வரும் 26-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, ஸ்பிக் மேகே அமைப்பின் தேசிய தலைவர் ராதா மோகன் திவாரி, செயலர் சப்யசாச்சி, சென்னை ஐஐடி டீன் (மாணவர் நலன்) சத்ய நாராயணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்:
நடிகர் சித்தார்த்தின் அடுத்த பட அப்டேட் இதோ... ரசிகர்கள் உற்சாகம்!
Ilaiyaraaja

இவ்விழாவில் பேசிய இளையராஜா, இசையைக் கற்றுக் கொள்வது குறித்தும் தான் இசையைக் கற்றுக் கொண்ட அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டார். கிராமத்தில் இருந்து இசை கற்றுக்கொள்வதற்காக சிறுவயதில் 400 ரூபாயுடன்வந்தேன். இசை என்றால் என்னவென்று அப்போது எனக்கு தெரியாது. இசையை கற்றுக்கொள்வதற்காக வந்த நான், இன்றைக்கு மையம் ஒன்றை ஆரம்பித்து அனைவருக்கும் கற்றுகொடுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை. இசை எனது மூச்சாக மாறிவிட்டது.

சென்னை ஐஐடியில் இருந்து 200இளையராஜாக்கள் உருவாக வேண்டும் என்பது எனது ஆசை என்றார். மேலும் இசை கற்றுக்கொண்டு, அதனை எட்டுத்திக்கும் பரப்ப வேண்டும் என்றும் இளையராஜா கேட்டுக்கொண்டார்.

logo
Kalki Online
kalkionline.com