நயன்தாரா-ஜெயம்ரவி மீண்டும் தனி ஒருவன் கூட்டணி!

Jayam Ravi Nayanthara new movie
Jayam Ravi Nayanthara new movie

சினிமாவில் திரையில் பார்க்கும் ஜோடிகள் மீண்டும் ஜோடியாக சேர்ந்து நடிக்க மாட்டார்களா என்று ரசிகர்கள்  எதிர்பார்பார்கள். இது போன்ற ஒரு ஜோடி தான் நயன்தாரா -ஜெயம்ரவி.

இருவரும் மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர்கள்.மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு நயன்தாரா ஜெயம் ரவி இணைந்து நடித்த தனி ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த ஜோடி மீண்டும் திரையில் சேர்ந்து நடிக்காதா என்று ரசிகர்கள் எதிர் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், ஏழு ஆண்டுகளுக்கு பின்பு கடந்த 2023 ஆம் ஆண்டு  இருவரும் சேர்ந்து நடித்த இறைவன் படம் வெளிவந்தது.

அஹ்மத் இப்படத்தை இயக்கி இருந்தார். வலுவான திரைக்கதை இல்லாததால் இறைவன் மக்களிடம் சேரவில்லை. மீண்டும் இந்த ஆண்டு நயன்தாரா -ஜெயம் ரவி இணைந்து நடிக்கும் தனி ஒருவன் 2 வெளியாக உள்ளது. தனி ஒருவன் படத்தை இயக்கிய மோகன் ராஜா இந்த இரண்டாம் பாக்கத்தையும் இயக்க உள்ளார். இந்த வருடம் வெளியாக உள்ள இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சுந்தர். C இயக்கத்தில் உருவாகும் சங்கமித்ரா படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாகும் சங்க மித்ரா அடுத்த 2025 ஆம் ஆண்டு வெளியாகிறது. எட்டாம் நூற்றாண்டு கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி -நயன்தாரா நடிகிறார்கள்.இனி வரும் அடுத்தடுத்த ஆண்டுகள் நயன்தாரா -ஜெயம் ரவி ஜோடியை வெள்ளி திரையில் ரசிகர்கள் வரவேற்க தயாராகி வருகிறார்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com