கார் விபத்தில் சிக்கிய நடிகர் ஜீவா…. ரசிகர்கள் அதிர்ச்சி!

Jiiva met with accident
Jiiva
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜீவா கார் விபத்தில் சிக்கியதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராவார். அக்ஷன் செய்து மக்கள் மனதைக் கவர்ந்த ஹீரோக்களுக்கு மத்தியில் தனது தனித்துவமான காமெடி பாங்கில் ஹீரோவாக ரசிகர்களை கவர்ந்தவர் ஜீவா. வில்லனாகவும், ஹீரோவாகவும் கலக்கி வந்த இவர், தற்போது ஓரிண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கதைக்களம் சரியில்லை என்றாலும், ஜீவாவிற்காக படத்தைப் பார்க்கப் போகும் மக்கள் ஏராளம். அந்தவகையில் நடிகர் ஜீவா தற்போது ஒரு கார் விபத்தில் சிக்கியதாக செய்திகள் வந்துள்ளன.

ஜீவா தனது குடும்பத்துடன் சேலத்திலிருந்து சென்னைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம், கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகே அவரது கார் சென்றுக்கொண்டிருக்கும்போது, நடுவே இருசக்கர வாகனம் வந்துவிட்டதால் கார் சாலையின் தடுப்பு சுவரில் மோதி விப்பத்துக்குள்ளானதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது. 

இந்த  விபத்தில் காரின் முன் பகுதி பலத்த சேதமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவருடைய குடும்பத்தினர் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

ஜீவாவுக்கும் அவருடைய மனைவிக்கும் காயம் ஏற்பட்டிருந்தாலும் ஜீவா அவருடைய நண்பர் ஒருவருக்கு போன் செய்து வேறு ஒரு காரை வரவழைத்து அந்த காரில் அவரே சேலம் மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. ஜீவாவிற்கு அடிபட்டு இருக்கிறது என்று தெரிந்ததும் அங்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் கூட தொடங்கி விட்டதால் ஜீவா அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பி போய் விட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இனி சின்னத்திரையில் நடிக்கமாட்டேன் – காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை!
Jiiva met with accident


அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர், சம்பவ இடத்திற்கு சின்னசேலம் போலீசார் வந்தனர். அவர்கள் விபத்தில் சிக்கிய காரை மீட்டனர். மேலும், ஜீவா மற்றும் அவரது குடும்பத்தினர் வேறு ஒரு கார் மூலமாக சேலத்திற்குச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 இப்போது இந்த சம்பவம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி சமூகவலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com