
பல திறமைகளை கொண்ட நடிகர் கமல்ஹாசன் பாடல்கள் பாடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படி அவர் லேடி வாய்ஸில் பாடி ஹிட்டடித்த பாடல்களை பற்றி பார்க்கலாம் வாங்க...
உலக நாயகன் என்ற பட்டம் பெற்று, இன்றளவும் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவையே கலக்கி வருபவர் தான் நடிகர் கமல்ஹாசன். அவர் நடிப்பில் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமையாளராக வலம் வருகிறார். சிறுவயதில் இருந்தே நடித்து வரும் கமல், தமிழ் சினிமாவுக்கு பல்வேறு டெக்னாலஜிகளையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார். அண்மையில் கூட ஏஐ தொழில்நுட்பம் பற்றி படிக்க அமெரிக்காவிற்காவுக்கு சென்றிருந்தார். 70 வயதாகியும் அவரின் கலை தாகம் என்பது தீர்ந்த பாடில்லை.
சினிமாவில் கமல்ஹாசனுக்கு எப்படி ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ, அந்த அளவிற்கு அவரின் குரலிற்கும் தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. குறிப்பாக இளையராஜாவும், கமல்ஹாசனும் இணைந்து இசையில் பல சாதனைகளை நிகழ்த்தி இருக்கிறார்கள். கமல்ஹாசன் குரலில் வெளியான பெரும்பாலான பாடல்கள் ஹிட் அடித்துள்ளன. அந்த வகையில் அவர் பெண் குரலில் பாடி ஹிட்டடித்த பாடல்களைப் பார்க்கலாம்.
ருக்கு ருக்கு பாடல்:
முதன்முதலில் பெண் குரலில் பாடியது அவ்வை சண்முகி படத்தில் தான். கடந்த 1996-ம் ஆண்டு ரிலீஸ் ஆன அப்படத்திற்கு தேவா இசையமைத்து இருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஹிட்டான நிலையில், அதில் ருக்கு ருக்கு பாடலை சுஜாதா மோகன் உடன் இணைந்து பாடி இருந்தார். இந்த படத்தில் அவரே லேடி கெட்டப்பில் கலக்கி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
முகுந்தா பாடல்:
தசாவதாரம் படத்தில் 10 வெவ்வேறு வேடங்களில் நடித்திருந்த கமல்ஹாசன், ஹிமேஷ் ரேஷ்மியா இசையில் முகுந்தா முகுந்தா பாடலை பாடி இருந்தார். சாதனா சர்கம் உடன் அவர் இணைந்து பாடிய இப்பாடலில் மூதாட்டி கெட்-அப்பில் வரும் கமல்ஹாசன் பாடுவது போல் சில வரிகள் இருக்கும். இதை மூதாட்டி வயதில் அச்சு அசலாக பாடி அசத்தியிருப்பார்.