ஜப்பானில் நடிகர் கார்த்தி!

கார்த்தி - அனு இம்மானுவேல்
கார்த்தி - அனு இம்மானுவேல்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

நடிகர் கார்த்தியின் 25-வது படமான ‘ஜப்பான்’ படத்தை இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கிற்ஹு. இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று காலை பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்த படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தூத்துக்குடியில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மிகப்பெரும் பொருட்செலவில் தயாராகவிருக்கும் இந்தப் படத்தின் முதல் பார்வையை (First Look) ரசிகர்கள் விரைவில் எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் ராஜூமுருகன்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க, ராஜு முருகன் இயக்கத்தில் 2016-ல் வெளிவந்து தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்ற படம் 'ஜோக்கர்'. தற்போது மீண்டும் இதே கூட்டணி 'ஜப்பான்' மூலம் மீண்டும் இணைகிறது.

ஜப்பான்  திரைப்படம்
ஜப்பான் திரைப்படம்

நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் முதன்முறையாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். தெலுங்கில் 'புஷ்பா' படத்தில் ‘வில்லனாக நடித்து மிரட்டிய நடிகர் சுனில், 'ஜப்பான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம்.. இப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார்.

மொத்தத்தில் ஜப்பான் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Kalki Online
kalkionline.com