ஜப்பான் விமர்சனம்!
ஜப்பான் - மாற்றம் இல்லாத பழைய பார்முலா!(2.5 / 5)
ராஜீமுருகன் இயக்கத்தில் கார்த்தியின் 25 படமாக பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வந்துள்ளது ஜப்பான்.
"கோவையில் பிரபல நகைக்கடையில் 200 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளை அடிக்கிறது ஜப்பான் (கார்த்தி ) டீம். அவர்களை போலீஸ் இரண்டு பிரிவுகளாக தேடுகிறது. ஒரு கட்டத்தில் இது ஜப்பான் இல்லை வேறொருவர் என்ற தகவல் வருகிறது. உண்மையான கொள்ளையடித்தது யார் என்ற பின்னணியில் திரைக்கதை நகர்கிறது.
குக்கூ,ஜோக்கர், ஜிப்சி போன்ற வாழ்வியல் படங்களை இயக்கிய ராஜு முருகன் ஜப்பான் படத்தின் மூலம் கமர்சியல் ரூட்டில் பயணித்துள்ளார்.படத்தின் முதல் பாதி பல மசாலா படங்களில் உள்ளது போலவே காட்சிகளை அமைத்துள்ளார் டைரக்டர். இரண்டாவது பாதி கொஞ்சம் பரவாயில்லை ரகம் தான். போலீஸ் அணுகு முறை, கொள்ளை கேங்ஸ்டர் மோதல் காட்சிகள் போன்ற விஷயங்கள் மிக சாதாரணமாக படமாக்கப்பட்டுள்ளது.
”ராகு காலம் போகட்டும், உன் ப்ரோமோஷனுக்கு வேலை செய்ய முடியாது. என் எமோஷனுக்குதான் வேலை செய்ய முடியும்” போன்ற சில வசனங்களில் மட்டும் ராஜீ முருகன் தெரிகிறார்.கார்த்தி குரலை மாற்றி பேசி வித்தியாசமாக நடிக்க முயற்சி செய்கிறார். ஆனால் நடிப்பு பல இடங்களில் கவர்ந்த அளவிற்க்கு குரல் மாற்றம் நம்மை கவர வில்லை. பல காட்சிகளில் வாகை சந்திரசேகர் பிராத்தனை செய்கிறாரா இல்லை காமடி செய்கிறாரா என்று குழப்பமாக இருக்கிறது.
அனு இமானுவேல் கவர்ச்சிக்காகவே பயன்படுத்த பட்டுள்ளார். சுனில் ஒரு டெரர் போலீஸ் அதிகாரியாக மிரட்டி உள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார் ராகமாக உள்ளது. ஜப்பானில் கிளைமேக்ஸ் மட்டுமே பேச வைக்கிறது. ஜப்பான் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.