நடிகர் கார்த்தியின் ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஜப்பான் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கார்த்தியின் நடிப்பில் வெளிவந்துள்ள ஜப்பான் திரைப்பட ட்ரைலர் வெளியிட்டு நிகழ்வு மிக பிரமாண்டமாக நடந்துள்ளது. கார்த்தியின் 25 படமான ஜப்பானை ராஜு முருகன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ஜப்பான் கார்த்தியின் 25 ஆவது படமாக இருப்பதால், கார்த்தி 25 சினிமா கலைஞர்களை இந்த நிகழ்வுக்கு வாழ்த்த அழைத்தார்.
அழைத்த சினிமா கலைஞர்கள் அனைவரும் வந்திருந்தனர். சத்யராஜ், சிபி, ஜெயம் ரவி, சூரியா, லோகேஷ் கனகராஜ், ஆர்யா, விஷால், பா ரஞ்சித் உடப்பட பல கலைஞர்கள் வந்திருந்தனர். வந்திருந்தவர்கள் தங்கள் படத்தின் ப்ரோமோஷன் மேடையாக இந்த நிகழ்வை பயன் படுத்தி கொண்டனர். பா. ரஞ்சித் தாங்கலான் பற்றியும், லோகேஷ் கனகராஜ் லியோ பற்றியும் பேசினார்கள். சத்யராஜ் கார்த்தி நான் தூக்கி வளர்த்த குழந்தை. கார்த்தி பிறந்த சமயத்தில் நான் சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தேன். இதை வைத்து கார்த்தியின் வயதை முடிவு செய்யாதீர்கள்.
கார்த்தி 25 படம் முடித்தது பெருமையாக உள்ளது என்றார்."20 ஆண்டுகளில் 25 படம் செய்துள்ளேன். ஆனால் உங்கள் முன்பு நிற்க கொஞ்சம் பதட்டமாக உள்ளது என்றார் கார்த்தி. ரோலக்ஸ் (சூர்யா ) டெல்லி (கார்த்தி ) இருவரையும் எப்போது சேர்ந்து திரையில் பார்க்கலாம் என்று ரசிகர்கள் கேட்க மிக விரைவில் என்றார்கள் இருவரும். எப்போதும் யதார்த்த படங்களை எடுக்கும் ராஜு முருகன் ஜப்பான் படத்தை மாறுபட்ட ஆக்ஷன் படமாக தந்துள்ளார் என ட்ரைலரை பார்க்கும் போது தெரிகிறது. இப்படம் தீபாவளி நாளில் திரைக்கு வருகிறது.கார்த்தி ஜோடியாக அனு இமானுவேல் நடிக்கிறார்.