

தமிழ் திரை உலகில் இருந்து நீண்ட இடைவேளைக்கு பின்னர், சுயமாக கட்சி தொடங்கி, அது 3 ஆண்டுகளை நிறைவு செய்யும் முன்னரே ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்தவர் விஜய். 2026 சட்டமன்றத் தேர்தலில் அவருக்கான அலை மிகப் பெரியதாக இருந்தது, விஜய் செல்லும் இடமெல்லாம் கூடிய கூட்டங்களினால் சில அசம்பாவிதங்களும் நிகழ்ந்தன. இந்த தேர்தலில் நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் புறம் தள்ளிவிட்டு, ஆட்சியில் அமர்ந்த புதிய கட்சி என்ற பெருமையையும் தவெக பெற்றுள்ளது.
தவெக பெரிய வெற்றியை பெற்றுள்ள போதிலும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சியில அமர்ந்துள்ளது. திரையுலகில் இருந்து விஜய் ஆட்சிக்கு வந்துள்ளதால், பெரும்பாலான நடிகர்கள் அவருக்கு எதிராக குரல் எழுப்பாமல் இருக்கின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது அந்த ஆட்சிக்கு எதிராக, நேரடியாக குறிப்பிட்ட சில நடிகர்களும் இயக்குனர்களும் அரசைக் குறைக் கூறி கருத்துக்களை தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தனர்.
தற்போது மீண்டும் ஆட்சி மாறி உள்ளதால் காட்சிகள் மட்டும் மாறவே இல்லை. அதிமுக ஆட்சியில் எவ்வாறு அரசை தொடர்ந்து குற்றம் சாட்டிக் கொண்டிருந்தார்களோ? அது போன்ற நடைமுறையை தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.கோவையில் நடைபெற்ற முன்னாள் காவல் அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளையின் 10 வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி கூறிய கருத்துக்கள் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
அந்த நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் இருந்து வரும் அழுத்தங்கள் காவல்துறைக்கு பெரிய சவாலாக மாறி உள்ளது. ஒரு குற்றம் நடைபெற்ற உடனேயே , சமூக வலைதளங்களில் அந்த தகவல் வெளியானால், அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் குற்றத்திற்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். இதனால் காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு மன அழுத்தம் அதிகமாகிறது.
இதற்கு முன்னர் காவலர்களுக்கு விடுப்பு என்பதே கிடையாது. ஆனால் தற்போது உள்ள புதிய அரசு (தவெக) காவலர்கள் ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளனர். ஆனால் , அந்த அறிவிப்பு ஏட்டளவில் மட்டுமே உள்ளது. அதை மாற்றி காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு தர வேண்டும் என்று கார்த்தி கூறியுள்ளார். கடந்த வாரம் விஜய் சேதுபதி மறைமுகமாக விஜயை தாக்கி பேசி சர்ச்சையானதை தொடர்ந்து, தற்போது கார்த்தி நேரடியாகவே அரசை குறிப்பிட்டு குற்றம் சாட்டியுள்ளது,பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கார்த்திக்கின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் தவெகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பினை கிளப்பியுள்ளது. கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில், வாய் மூடி அமைதியாக இருந்த கார்த்தி போன்றோர், புதிய அரசு அமைந்ததும் வாய் திறப்பது ஏன்? இந்த ஆட்சியிலும் அதிமுக ஆட்சிகளும் தொடர்ந்து குறை சொன்ன கார்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர், திமுக ஆட்சியின் போது மட்டும் ஏன் அமைதியாக இருந்தனர். அப்போது நடந்த குறைகள் அவர்களுக்கு தெரியவில்லையா? என்று விஜய் ரசிகர்கள் கடுமையாக காத்தியை விமர்சித்து வருகின்றனர்.