கைதி 2 எப்போது? கார்த்தி கொடுத்த மாஸ் அப்டேட்!

Kaithi
Kaithi

கைதி 2 படம் குறித்த அப்டேட்டை பகிர்ந்துள்ளார் நடிகர் கார்த்தி.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான கைதி படத்தில் நடிகர் கார்த்தி, நரேன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தின் 2ஆம் பாகம் வரும் என எப்போதோ அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் இன்றளவும் காத்து கொண்டிருக்கின்றனர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மொத்தமே 10 படங்கள் தான் இயக்குவேன் என அறிவித்த நிலையில், இவரின் 2 வது படமான கைதி மெகா ஹிட்டடித்தது. தொடர்ந்து விஜய்யை வைத்து 2 படங்கள் இயக்கிய நிலையில் கமலை வைத்து ஒரு படம் எடுத்தார். தற்போது ரஜினிகாந்த்தின் படத்திற்காக தீவிரமாக உழைத்து வருகிறார்.

லோகேஷுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், இவரின் இந்த படத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தின் இறுதியில் கார்த்தி யார், அவருக்கும் வில்லன் அடைக்கலத்திற்கும் இடையே என்ன பகை என்ற கேள்வியுடன் படம் நிறைவடைந்தது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி, நரேன், கண்ணா ரவி, தீனா உள்ளிட்டோர் நடித்து அசத்தியிருந்தனர்.  மேலும், இதில் நடிகர் கார்த்தியின் மகளாக பேபி மோனிகா நடித்தியிருப்பார். ஆசிரமத்தில் வளர்ந்த மகளை பல வருடங்களுக்கு பிறகு சந்திப்பார் கார்த்தி. குழந்தையுடன் தனி வாழ்க்கையை தொடங்க போகும் கார்த்திக்கு அடுத்து என்ன நடக்கும் என்பதையே 2ஆம் பாகம் கூறுகிறது.

இதையும் படியுங்கள்:
கோர்ட்டில் சாட்சி சொன்ன ராதிகா... ஈஸ்வரி வெளியே வருவாரா?
Kaithi

இந்த நிலையில் கைதி 2 படப்பிடிப்பு எப்போது துவங்குகிறது என்பது குறித்து நடிகர் கார்த்தி பேசியுள்ளார். இதில் தற்போது மெய்யழகன் மற்றும் வா வாத்தியாரே படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது, அடுத்தது சர்தார் 2 மற்றும் கைதி 2 தான் என கூறியுள்ளார். மீண்டும் பிரியாணி பக்கெட்டை எடுக்க நேரம் வந்துவிட்டது. அடுத்த ஆண்டு கைதி 2 படப்பிடிப்பு துவங்கும் என கூறினாராம். இந்த தகவல் கார்த்தி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com