வெளியானது கவினின் ஸ்டார் முதல் பாடல்.. கொண்டாடும் ரசிகர்கள்!

Actor Kavin Star Movie
Actor Kavin Star Movie

டிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, கவின் நடிக்கும் ஸ்டார்திரைப்படத்தின் காலேஜ் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற முதல் பாடல் வீடியோ வெளியானது.

கவின் நடிப்பில் லிஃப்ட், டாடா ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. பிக்பாஸ் மூலம் உலகளவில் பிரபலமான நடிகர் கவின், கடைசியாக டாடா படத்தில் நடித்திருந்தார். தந்தை மகனின் அன்பை வெளிப்படுத்தும் விதமான அமைந்த இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் கவினின் அடுத்த படம் குறித்த அப்டேட் சமீபத்தில் வெளியானது. ஸ்டார் என்று பெயரிடப்பட்டிருக்கும் அந்த படத்தை ‘பியார் பிரேமா காதல்’ படத்தை இயக்கிய இளன் இயக்குகிறார்.இந்தப் படத்தின் ப்ரோமோ வீடியோ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இன்று ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்டார் படத்திலிருந்து காலேஜ் சூப்பர் ஸ்டார் என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து பாடிய, இந்த பாடலுக்கு மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். பியர் பிரேமா காதல் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான இளன் தான் இந்த படத்தையும் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், முதல் பாடல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் அறிவிக்கும் வகையில், படத்தின் போட்டோ ஆல்பம் என்ற பெயரில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அதில், ரஜினி கமல், விஜய் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தது. கல்லூரி காதல் கதையாக உருவாகியிருக்கும் இந்த படத்தில், லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு எழில் அரசு கே ஒளிப்பதிவு செய்ய வினோத் ராஜ் குமார் என் கலை இயக்குனராகவும், பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார். கல்லூரி இளைஞர்களின் மனதை தொட்ட இந்த பாடலால் கவின் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த பாடலும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com