அந்த ஒரு வார்த்தைதான் 728 படங்கள் நடித்ததற்கு காரணம் - நடிகர் குமரிமுத்து வாழ்க்கையை திருப்பிப்போட்ட சம்பவம்!

Kumarimuthu
Kumarimuthu
Published on

ஒருவரை அவமானப்படுத்தும் விதமாக பேசிய அந்த ஒரு வார்த்தைதான் குமரிமுத்துவின் வாழ்க்கையையே திருப்பிப்போட்டிருக்கிறது. யார் அப்படி பேசியது? என்ன நடந்தது? என்றுப் பார்ப்போமா?

ஒருவருடைய தோற்றத்தைப் பார்த்து புண்படும்படி பேசுவது எத்தனை பெரிய பாவம். ஒருவரை நாம் எளிதாக அவமானப்படுத்தும்படி பேசிவிடுவோம் , ஆனால் கேட்பவர்களுக்கு அப்படி இல்லையே. தவறே செய்யாமல் வெளித்தோற்றத்தினால் மட்டும் அசிங்கப்பட்டு நிற்பவர்கள் மட்டும் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டுத்தான் குமரிமுத்து.

குமரிமுத்து என்றாலே நமது நினைவுக்கு வருவது அவரது சிரிப்புதான். தனது சிரிப்பால் மட்டுமே மக்களை சிரிக்கவைப்பது அவரது தனித்துவம். 14 வயதில் சொந்த ஊரான கன்னியாகுமாரியை விட்டு சென்னைக்கு வந்து மேடை நாடகங்களில் நடித்தார் குமரிமுத்து. மாறுகண்களுடன் இருந்த இவர் எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம். மேடை நாடகங்களுக்கு பிறகு வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்தார் குமரிமுத்து. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் சுமார் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் இவர்.

இவர் தன் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தைப் பற்றி ஒருமுறை பேசியதைப் பார்ப்போம், “பொண்ணு பார்க்க போனோம். பொண்ண பாத்தோனே பிடிச்சுருச்சு. பிடிச்சுருச்சுன்னும் சொல்லிட்டேன். உடனே அந்த பொண்ணு உள்ள போயிருச்சு. கூட இருந்த தோழிகளும் உள்ள போய்ட்டாங்க… உள்ள போய் அந்தப் பொண்ணுட்ட கேட்ருக்காங்க… மாப்பிள்ளைக்கு உன்ன பிடிச்சுருச்சு… உனக்கு பிடிச்சுருக்கானு… எங்க அவன பிடிச்சுருக்கு? அவன் வடக்கப் பாக்குற மாதிரி தெக்க பாக்குறான். எங்கயோ பாக்குற மாதிரி என்ன பாக்குறான்… இவன கட்டிக்கிட்டு என்ன எளவக் கொட்டனு சொன்னா… அந்த ஒரே ஒரு வார்த்த என்ன இவ்ளோ பெரிய இடத்துல கொண்டு வந்து உக்கார வச்சு ருக்குப் பாருங்க… அதுனாலதான் சொல்லுவேன்…

இதையும் படியுங்கள்:
சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!
Kumarimuthu

வார்த்தைய மட்டும் பாத்து பேசுங்க… வார்த்தைனா அலங்கார வார்த்தையா இருக்கட்டும், அசிங்கமான வார்த்தையா இருக்கட்டும்.. எதா இருந்தாலும் பார்த்து பேசுங்க… வார்த்தைங்குறது ஒரு மனிதன உயர்த்தும் ஒரு மனிதன தாழ்த்தும் ஒரு மனிதன கொன்னே போட்ரும்… இன்னொரு ஒரு வார்த்த அவன் வாழ வச்சு மேல கொண்டுப் போய் நிக்க வைக்கும்… இதுதான் வார்த்தையோட அலங்காரம்… இதுமாதிரிதான் அந்த பொண்ணு சொன்ன ஒரு வார்த்த என்ன 728 படங்கள் நடிக்க வச்சுருக்கு.. “ என்று பேசினார்.

ஒருமுறைப் பார்த்த பெண் கூறிய அந்த ஒரு வார்த்தையால், குமரிமுத்து தனது வாழ்க்கையையே மாற்றி எழுதியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com