தம்பிக்கு கார் பரிசளித்த ராகவா லாரன்ஸ்..!

Raghava Lawrence
Raghava Lawrence

நடிகர் ராகவா லாரன்ஸ் தம்பியின் திறமையை பாராட்டி கார் பரிசளித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் தான் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இவரது சகோதரரை தனது பாடல் மூலம் சினிமாவில் அறிமுகம் செய்தார்.

இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸின் சகோதரர் எல்வின், புல்லட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் காட்சிகளை சமீபத்தில் பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், நெகிழ்ச்சியில் திழைத்துள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிட்ப்பு முடிந்துள்ள நிலையில், தனது சகோதரரை பாராட்டி ராகவா லாரன்ஸ் தம்பிக்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.

இது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த அவர், இந்த அருமையான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எனது சகோதரர் எல்வினின் முதல் திரைப்படமான புல்லட்டைப் பார்த்தேன், அவருடைய நடிப்பில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது அவருக்கான எனது பரிசு மற்றும் அவரது நடிப்பால் என்னை பெருமைப்படுத்தியதற்காக ஒரு சிறப்பு முத்தம். ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள். என் சகோதரனுக்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் வேண்டும் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
குட்நியூஸ் சொன்ன நடிகை ஆலியா மானசா!
Raghava Lawrence

எல்வின் புல்லட் திரைப்படம் மூலமாக நாயகனாக அறிமுகமானாலும், அவர் இதற்கு முன்பு காஞ்சனா 3 திரைப்படத்தில் தன்னுடைய சகோதரர் லாரன்ஸ் உடன் படத்தில் இடம்பெறும் முதல் பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதுவும் லாரன்ஸ் போலவே வேகமாகவும், கடினமான நடன அசைவுகளை சுலபமாகவும் ஆடி கவனம் ஈர்த்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com