ரஜினி 173: டாக்டர் வேடத்தில் சூப்பர் ஸ்டார் - இதுதான் முதல்முறையா?

ரஜினிகாந்த் டாக்டர் வேடத்தில் நடிப்பது இது முதல்முறையல்ல. ஆயிரம் ஜென்மங்கள் முதல் சந்திரமுகி வரை ரஜினியின் டாக்டர் ரோல்களைப் பார்ப்போம்.
Rajini 173
ரஜினி 173
Updated on

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து + ரஜினிகாந்த் காம்போ உறுதி செய்யப்பட்டது அனைவருக்கும் தெரிந்த தகவல் தான்.

2020 ஆம் ஆண்டில் ஓ மை கடவுளே என்ற வித்தியாசமான படத்தை எடுத்து கமர்ஷியல் சக்சஸ் ஆக்கினார். இது சயின்ஸ் பிக்சன் மேஜிக் ரியலிசம் பார்மட்டில் அமைந்த வித்தியாசமான கதை

2022ம் ஆண்டில் ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக்காக Ori Devuda படம் எடுத்தார். அதுவும் ஹிட்.

2025ம் ஆண்டில் பிரதீப் ரங்கநாத் நடிப்பில் மெகா ஹிட் ஆன ட்ராகன் படத்தை இயக்கினார். இது ரொமாண்டிக் டிராமா.

பொதுவாக ரஜினி காந்த் லேட்டஸ்ட்டாக ஹிட் கொடுத்த இளம் இயக்குநருடன் இணைவது வழக்கம். அந்த முறையில் தான் அஸ்வத் மாரிமுத்துவுடன் இணைந்திருக்கிறார்.

கோவையில் 5 ரூபா டாக்டர் என்று ஒருவர் மிகவும் புகழ் பெற்று விளங்கினார். அவர் சேவை மனப்பான்மையில் மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை செய்தார்.

அந்தக் கேரக்டரை மனதில் வைத்து சூர்யாவுக்கு முதலில் இந்தக்கதை சொல்லப்பட்டது. ஆனால் ஏனோ சூர்யாவுக்கு லைன் அப்பில் பல படங்கள் வரிசையாக புக் ஆகி இருந்ததால் அவரால் இந்தப்படத்தை செய்ய முடியவில்லை. ஆனால், ரஜினிக்கு அஸ்வத் மாரிமுத்து சொன்ன ஒன் லைன் மிகவும் பிடித்து விட்டது. நிச்சயம் நாம் இதை செய்கிறோம் என உறுதி அளித்தார்.

இந்தப்படத்தில் ரஜினி நடுத்தர வயதுள்ள டாக்டர் ஆக வருகிறார்.

ரஜினி 173 படங்களில் ரஜினி முதன் முறையாக டாக்டர் ஆக நடிக்கிறார் என்று விளம்பரம் வருகிறது. அது தவறு.

இதற்கு முன் ரஜினிகாந்த் டாக்டர் ஆக நடித்த படங்களைப் பார்ப்போம்

Superstar Rajinikanth
Superstar Rajinikanth

1. ஆயிரம் ஜென்மங்கள் 1978:

இது ஒரு முன் ஜென்மக்கதை. நாயகியின் அண்ணனாக சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு வரும் டாக்டர் ரமேஷ் ஆக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். படத்தை இயக்கியவர் பசி புகழ்துரை. இது வியாபார ரீதியாக மெகா ஹிட் ஆன படம்.

சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை (2014) ஆயிரம் ஜென்மங்கள் படத்தின் காப்பி என கேஸ் போடப்பட்டது. விசாரித்த ஜட்ஜ் கோர்ட்டுக்கு வெளியே இரு தரப்பும் பேசி முடிவுக்கு வர அறிவுறுத்தியது.

இதையும் படியுங்கள்:
வாரண்ட் விமர்சனம்: போலீஸ் ஸ்டேஷன் உள்ளே நடக்கும் அதிர்ச்சி ரகசியங்கள் என்ன?
Rajini 173

2. கர்ஜனை 1981:

இதில் ரஜினிகாந்த் டாக்டர் விஜய் ஆக நடித்திருக்கிறார். உணவில் விஷம் கலந்து அதற்கு மாற்று மருந்தை விற்பனை செய்யும் வில்லன் கும்பலுக்கு எதிராகக் களம் இறங்கும் நாயகன் அதில் எப்படி ஜெயித்தான் என்பதே கதை. இந்தக் கதையில் நாயகன், வில்லன் இருவரும் டாக்டர். இயக்கியவர் சி. வி. ராஜேந்திரன்.

இது தெலுங்கு, கன்னடம், தமிழ் என 3 மொழிகளில் உருவானது. மூன்றுமே தோல்விப்படங்கள். ரஜினி நடித்த 172 படங்களில் சென்னையில் 53 நாட்கள் மட்டுமே ஓடிய ஒரே படமாக கர்ஜனை அமைந்தது.

3. சந்திரமுகி 2005:

இதில் ரஜினி மனநல மருத்துவர் ஆக நடித்திருக்கிறார். இயக்கம் பி. வாசு. பிரம்மாண்டமான ஹிட். இந்தப் படத்துடன் விஜய் நடித்த சச்சின் படம் மோதியது. சச்சின் ஜாலியான ரொமாண்டிக் மூவியாக அமைந்தும், சந்திரமுகியின் பிரம்மாண்டமான வெற்றிக்கு முன் தாக்குப்பிடிக்காமல் காணாமல் போனது.

இதில் ரஜினி வேட்டையன் மகாராஜாவாக, வில்லனாக இன்னொரு ரோல் பண்ணி இருந்தார். அந்தக் கேரக்டர் பிரமாதமாகப் பேசப்பட்டு பின் வேட்டையன் என்ற டைட்டிலில் ஒரு படமாகவே வந்தது. அதில் போலீஸ் ஆபீசர் ஆக என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்தார். படம் நன்றாக இருந்தும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை.

logo
Kalki Online
kalkionline.com