இமயமலை சென்ற ரஜினிகாந்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கும் வேட்டையன் திரைபடத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அண்மையில் நடிகர் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரக அரசு கௌரவித்து இருந்தது. இதற்காக துபாய் சென்ற ரஜனிகாந்த் அங்குள்ள இந்து கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. சுமார் 2 வார கால ஓய்வுக்கு பின் ரஜினிகாந்த் நேற்று சென்னை திரும்பினார். இந்நிலையில், கடந்த மே 29ஆம் தேதி ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வார் என்று சொல்லப்பட்டது.
இதை தொடர்ந்து இமயமலைக்கு சென்றுள்ள ரஜினிகாந்த், அங்கு இமயமலை அடிவாரத்தில் நின்றபாடு எடுத்து கொண்ட புகைப்படம் படு வைரலாகி வருகிறது. வெள்ளை நிற வேஷ்டி சட்டை அணிந்து, ஷால் ஒன்றைபோற்றியபடி ... கூலிங் கிளாஸ் அணிந்து செம்ம கூலாக தலைவர் போஸ் கொடுக்கிறார்.
ஏற்கனவே 2014-ஆம் ஆண்டு இதே போல் ரஜினி போஸ் கொடுத்த புகைப்படத்தை இப்போது வெளியிட்டு. 10 ஆண்டுகளுக்கு பின்னரும் தலைவர் அப்படியே இருக்கிறார் என, ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்க்கு கமெண்ட் போட்டுவருகிறார்கள்.
இமயமலையில் இருந்து சென்னை திரும்பியதும் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகையுள்ள கூலி படத்தில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முன்னேற்பாடுகளை ஏற்கனவே முடித்து விட்ட லோகேஷ் ரஜினி படப்பிடிப்பில் இணைவதாக காத்திருக்கிறார்.