ரஜினியின் வேட்டையன் படத்தை அதிக விலைக்கு வாங்கிய பிரபல ஓடிடி தளம்..!

Rajinikanth
Rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல டிஜிட்டல் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகராக, சூப்பர் ஸ்டாராக கடந்த பல ஆண்டுகளாக பயணித்து வருபவர் தான் ரஜினிகாந்த். 45 ஆண்டுகளை கடந்து கோலிவுட் உலகின் வெற்றி நாயகனாக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்

ஜெய் பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 170வது படத்தில் நடித்துவருகிறார். இப்படத்திற்கு வேட்டையன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மாஸ் வெற்றியடைந்த நிலையில், அதன் வசூல் எக்கச்சக்கமாக எகிறியது. பான் இந்தியா நடிகர்கள் நடித்திருந்ததால் இந்த படம் இந்திய அளவில் நல்ல வசூலை பெற்றது. இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள தலைவர் 170 படம் ரசிகர்கள் மனதில் பெரும் எதிர்ப்பார்ப்பை உருவாகியுள்ளது.

குறிப்பாக ஜெய்பீம் படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் தலைவர் 170 படத்தை எழுதி இயக்குவதால் இப்படத்தின் கதை எப்படிப்பட்டதாக இருக்கும் என பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் தொடர்ந்து சில நாட்களாக படக்குழுவினர் குறித்த அப்டேட்டுகளை வெளியானது. அதன்படி படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும், நடிகைகள் மஞ்சு வாரியர், சார்பேட்டா பரம்பரை பட நடிகை துஷாரா விஜயன் மற்றும் நடிகை ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
இவர் மூன்று படங்கள்தான் நடித்திருக்கிறாரா? - சர்வதேச ரசிகர்கள் ஷாக்… சூரி சொன்ன பதில்!
Rajinikanth

இந்த படத்தின் படபிடிப்பு முடிந்த நிலையில் சமீபத்தில் இமயமலை சென்று வந்தார். இதையடுத்து பிரதமர் பதவியேற்பு விழாவிலும் பங்கேற்று அடுத்த படமான லோகேஷின் கூலி பட பணிகளையும் துவங்கவுள்ளார். இந்த சூழலில் வேட்டையின் திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதன் சாட்டிலைட் உரிமத்தை பிரபல சன் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், அதேபோல வேட்டையன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com