புஷ்பா இயக்குனருடன் கைக்கோர்க்கும் ராம் சரண்.. வரப்போகும் மாஸ் கூட்டணியின் படம்!

Ram Charan - Sukumar
Ram Charan - Sukumar

புஷ்பா படத்தை இயக்கிய சுகுமார் தனது அடுத்தப்பட ஹீரோவை உறுதி செய்துள்ளார்.

டோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ராம் சரண், தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சுகுமார் இயக்கத்தில் பல வெற்றிப் படங்கள் இருந்தாலும், அவரை புகழின் உச்சியில் கொண்டு சேர்த்தது, ராம் சரண் நடித்த ரங்கஸ்தலம். இதில் ராம் சரணுடன் சமந்தா, ஆதி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இதில் கண் தெரியாதவராக ராம் சரண் நடித்திருந்தார். படத்தின் ஒவ்வொரு பிரேமையும் இழைத்து உருவாக்கியிருந்தார் சுகுமார்.

இதையடுத்து இவர் இயக்கிய புஷ்பா படமும் ப்ளாக் பஸ்டர் தான். அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்ற படம் என்றே சொல்லலாம். ஆஸ்கரை வென்ற புகழும் இந்த படத்தை சாரும். இந்த படத்தின் 2ஆம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம் சரண் - சுகுமார்
ராம் சரண் - சுகுமார்
இதையும் படியுங்கள்:
இணையத்தில் ட்ரெண்டாகும் விஜய் ஆண்டனி 'ரோமியோ' பட ட்ரைலர்... எப்படி இருக்கு தெரியுமா?
Ram Charan - Sukumar

அப்படி அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த சுகுமார் தான் மீண்டும் ராம்சரணுடன் கைக்கோர்க்கவுள்ளார். இவர்கள் இணையும் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. இவர்கள்தான் ரங்கஸ்தலம் படத்தையும் தயாரித்திருந்தனர். ரங்கஸ்தலத்தில் சிறப்பான பாடல்கள், பின்னணி இசை தந்த தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார்.

ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். அடுத்து அவர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிக்கிறார். இதன் தொடக்கவிழா சமீபத்தில் நடந்தது. அத்துடன், சுகுமார் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com