இணையத்தில் ட்ரெண்டாகும் விஜய் ஆண்டனி 'ரோமியோ' பட ட்ரைலர்... எப்படி இருக்கு தெரியுமா?

Romeo Trailer
Romeo Trailer

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் ரோமியோ பட ட்ரைலர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பல வெற்றி படங்களுக்கு இசையமைத்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார் விஜய் ஆண்டனி. அதன் பின் நடிப்பின் பக்கம் வந்த அவர், 2012ஆம் ஆண்டு வெளியான நான் படத்தில் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் சலீம், பிச்சைக்காரன், சைத்தான் என அடுத்தடுத்து படங்கள் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள படம் தான் ரோமியோ. இந்த இயக்குனர் இயக்கத்தில் ஏற்கனவே காதல் டிஸ்டன்ஸிங் என்ற பிரபலமான வெப் சீரிஸ் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை மிருணாளினி ரவி நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில் தற்போது ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
Thug life படத்திலிருந்து விலகிய பிரபலங்கள்… அந்த இடத்தில் யார் நடிக்கப்போகிறார்கள்?
Romeo Trailer

ட்ரைலர் எப்படி இருக்கு?

தமிழ் சினிமாவில் விருப்பமில்லாத திருமணம் வெற்றியடைந்த கதையாக பல உள்ளன. மௌன ராகம், ராஜா ராணி என பல படங்கள் விருப்பமில்லாத திருமணத்தின் காதல் தான். அப்படி தான் இந்த ரோமியோ படமும் அமைந்துள்ளது. இதில் விஜய் ஆண்டனி இனி ஒருதலையாக மனைவியை காதலிக்க போகிறேன் என்று கூறி அனைவரையும் ட்ரைலர் தொடக்கத்திலேயே அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.

என்னதான் அரைத்தே கதையே என்றாலும், நகைச்சுவை உணர்வுகளை கொண்ட படமாக அமைந்துள்ளதால் குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக இருக்கும். ட்ரைலரின் இடம்பெற்றுள்ள காமெடிகளே நம்மை கலகலப்பு அடைய செய்வதால் படமும் நகைச்சுவையாக இருக்கும் என தெரிகிறது. இந்த படத்தின் டரைலர் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com