குட்பேட் அக்லியில் இணைந்த ரெடின் கிங்ஸ்லி..!

Redin Kingsley
Redin Kingsley
Updated on

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடிகர் ரெடின் கிங்ஸ்லி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து அஜித்தின் அடுத்தப் படத்திற்கான அப்டேட் மார்ச் மாதம் வெளியானது.

அஜித் தனது 63வது படத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கைக்கோர்க்கிறார். இப்படத்திற்கு குட் பேட் அக்லி என்று பெயரிடப்பட்டுள்ளது. மைத்திரி மூவிஸ் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கவுள்ளதாகவும், அடுத்த ஆண்டுப் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் படக்குழுத் தெரிவித்துள்ளது. இயக்குனர் ஆதிக் 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்திற்குப் பிறகு தொடர் தோல்விகளையே சந்தித்து வந்தார். இந்தநிலையில் அவரின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த மார்க் ஆண்டனி படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று வசூலை ஈட்டியதால், அவர் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.

மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் எஸ்.ஜே.சூர்யா. ஆகையால் ஆதிக், அஜித் வைத்து எடுக்கப்போகும் குட் பேட் அக்லி படத்திலும் எஸ்.ஜே.சூர்யாவையே வில்லனாக நடிக்க அழைப்புவிடுத்திருக்கிறார் என்றுக் கூறப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சூப்பர் ஸ்டாரை வைத்து மாஸ்டர் ப்ளான் போட்ட அட்லீ... என்ன தெரியுமா?
Redin Kingsley

குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு சத்தமில்லாமல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆகையால், விடாமுயற்சியை விட இப்படம் விரைவாக முடிக்கப்பட்டுவிடும் என்றும், விடாமுயற்சிக்கு முன்னர் இப்படம் திரைக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கு இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் படத்தின் காமெடி கதாபாத்திரத்தை மெருகூற்ற நடிகர் ரெடின் கிங்ஸ்லி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீப காலமாகவே பல படங்களில் ரெடின் கிங்ஸ்லி நடித்து வருகிறார். இவரின் காமெடிக்கு சிறு குழந்தை முதல் வயதானவர்கள் வரை அடிமை என்றே சொல்லலாம். இந்த நிலையில், நகைச்சுவையில் தற்போது கலக்கிக்கொண்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி இப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரெடின் கிங்ஸ்லி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

logo
Kalki Online
kalkionline.com