களைகட்டும் ரோபோ ஷங்கர் மகள் திருமண விழா... கொண்டாட்ட விடியோவை பகிர்ந்த பிரபலம்!

Robo Shankar's daughter's wedding
Robo Shankar's daughter's wedding

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா சங்கரின் திருமணம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் நேற்று நலங்கு வைக்கும் நிகழ்ச்சியை தடபுடலாக நடந்து முடிந்துள்ளது.

மேடை நாடகங்களில் நடித்து புகழ்பெற்று, அதன் பிறகு வெள்ளித்தறையில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க துவங்கி, பிறகு மிகப் பெரிய காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக உயர்ந்தவர் தான் ரோபோ சங்கர். தற்போது அஜித், விஜய் என பெரிய பெரிய நடிகர்களுடன் படம் நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் அவருக்கு உடல்நலக்கோளாறுகள் ஏற்பட்டு மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டார். தற்போது அவர் மீண்டு வந்த நிலையில், அவருடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்.

பிரபல நடிகையான இந்திரஜா சங்கருக்கு அவருடைய உறவினர் கார்த்தி என்பவருடன் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த வாரம் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், தற்போது திருமண நிகழ்வுக்கான சடங்குகள் துவங்கியுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பல நடிகர், நடிகைகள் நேரில் கலந்து கொண்டனர்.

கொண்டாட்டத்தின் முதல் நாளான நேற்று ஹல்தி வைபவம் களைகட்டியது. இதில், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகளை நடத்தி அசத்தியுள்ளார் ரோபோ சங்கர். மேலும் விழாவில் ரோபோ சங்கர் புடவை கட்டி அனைவரையும் குதூகலித்தார்.

இதையும் படியுங்கள்:
இன்று வெளியாகும் மோகன்லாலின் 360 வது படத்தின் அப்டேட்!
Robo Shankar's daughter's wedding

தற்பொழுது அந்த செலிப்ரேஷன் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரபல நடிகர் ராஜ்கமல். மேலும் தனது தங்கை இந்திரஜாவிற்கு அனைவரும் திருமண வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அதில், அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், இடிச்ச பச்சரி பாடல் ஒலிக்க ரோபோ சங்கர் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக விழாவை கொண்டாடுகின்றனர். தொடர்ந்து மாப்பிள்ளை பொன்னுக்கு சடங்குகள் செய்யப்படுகிறது. மேலும் மாப்பிள்ளையும், பொன்னும் இணைந்து குத்தாட்டம் போட்டு அனைவரையும் குதூகலித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com