சசிகுமார்,லிஜோமோல் நடிப்பில் உருவாகும் புதிய படம்!

Sasikumar Lijo
Sasikumar Lijo
ராகவ்குமார்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

சிகுமார்  மற்றும் ஜெய் பீம் புகழ் லிஜோ மோல் ஜோஷ் நடிப்பில் புதிய திரைப்படத்தை 'கழுகு' சத்யசிவா இயக்கத்தில் உருவாக உள்ளது.

90 கால கடத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தைத் திரையில்  கொண்டுவரப் படக்குழு மிகவும் கவனம்  செலுத்தி வருகிறது. 90 களின் காலகட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில் கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப்பெரும் பொருட்செலவில் ஒரு பிரம்மாண்டமான செட் அமைத்துப் படத்தின் காட்சிகளைப் படக்குழு படமாக்கி வருகிறது. 

சசிக்குமார்  மாறுபட்ட வேடங்களில் நடிப்பவர்   ஜெய்பீம் படத்தில்  தான் ஒரு சிறந்த நடிகை என்று  லிஜோமோல் நிரூபித்தார். சசி -லிஜா கூட்டணியில் ஒரு உணர்வு பூர்வமான நடிப்பை பார்க்கலாம் என்கிறார் டைரக்டர். பாலிவுட் படங்களில் நடிக்கும்  சுதேவ் நாயர் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன்  சரவணன், கேஜிஎஃப் மாளவிகா, போஸ்வெங்கட், பேராசிரியர் மு ராமசாமி, ரமேஷ் கண்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பாண்டியன் பரசுராம் இப்படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார்.

இப்படத்தின் தலைப்பு, டீசர் , டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் ஒரிரு நாட்களில்  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்கிறது படக்குழு.

logo
Kalki Online
kalkionline.com