நடிகர் சத்யராஜா இது? ஷாக்காகும் ரசிகர்கள்!

Sathyaraj
Sathyaraj

நடிகர் சத்யராஜின் புது லுக் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த 1978ம் ஆண்டு தமிழில் வெளியான "சட்டம் என் கையில்" என்கிற திரைப்படத்தில், விக்கி என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையுலகில் களம் இறங்கிய நடிகர் தான் சத்யராஜ். தொடர்ச்சியாக தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வந்தார். 1985 மற்றும் 1986 உள்ளிட்ட ஆண்டுகளில் ஒரே ஆண்டில் 25 க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் பயணித்த ஒரு மெகா ஹிட் நடிகர் தான் சத்யராஜ்.

வில்லன், தந்தை, ஹீரோ என அனைத்து கதாபாத்திரங்களில் பொருத்தமாக நடித்து அசத்தியிருக்கிறார். உலக அளவில் கோடி கணக்கில் வசூல் ஆன பாகுபலி படத்தில் மொட்டை தலையுடன் கட்டப்பாவாக நடித்து பெரும் புகழ்பெற்றார். இவரை தொடர்ந்து இவர் மகன் நடிக்க வந்த போதிலும் அவருக்கு பெரிய பட வாய்ப்புகள் குவியவில்லை. அவர் நடித்த படங்களும் பெரிய அளவில் ஹிட் அடிக்கவில்லை. ஆனால் இந்த வயதிலும் தற்போது வரை மெகா ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் சத்யராஜ்.

இதையும் படியுங்கள்:
"நண்பா வா இப்பவும் எப்பவும்" கூலி படத்தில் மீண்டும் நண்பருடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்!
Sathyaraj

வலுக்கை தலையுடன் இருக்கும் நடிகர் சத்யராஜ் ஒவ்வொரு படத்திற்கேற்ப விக்குகளை வைத்து கெட்டப் சேஞ் செய்து வருகிறார். விஜய் நடித்த நண்பன், இந்த ஆண்டு ஆர்ஜே பாலாஜியுடன் நடித்த சிங்கப்பூர் சலூன் மற்றும் சமீபத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்த வெப்பன் உள்ளிட்ட படங்களில் வித விதமான விக்குகளையும் வைத்து அவர் நடித்துள்ளார். இந்த நிலையில் பிரபல நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள "மழை பிடிக்காத மனிதன்" என்கின்ற திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் அவருடைய கேரக்டரின் போஸ்டர் தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில், சத்யராஜ் வெள்ளை முடியுடன் கேங்ஸ்டர் போன்ற தோற்றத்தில் காட்சியளிப்பதால் ரசிகர்கள் நடிகர் சத்யராஜா இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியாகும் 10 படங்களில் கிட்டத்தட்ட 8 படங்களில் சத்யராஜின் கால்ஷீட் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com