"நண்பா வா இப்பவும் எப்பவும்" கூலி படத்தில் மீண்டும் நண்பருடன் இணைந்த லோகேஷ் கனகராஜ்!

Lokesh Kanagaraj
Lokesh Kanagaraj

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் கூலி படத்தில் லோகேஷின் நண்பர் இணைந்துள்ளளார்.

தலைவர் 171 மூலம் முதன்முறையாக ரஜினி - லோகேஷ் கூட்டணி இணைகிறது. இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் அனைத்தும் படமும் ஹிட்டாகி வருகிறது. இதுவரை விஜய், கமல் என பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்து ஹிட்டடித்துள்ளார்.

முதல் படமான மாநகரமே இவருக்கு பெரிய வரவேற்பை அளித்தது. சமீபத்தில் விஜய் - லோகேஷின் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். 71 வயதாகும் ரஜினிகாந்த் இன்றளவிலும் அயராது தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினியின் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. பின் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து லோகேஷ் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். இந்த படத்தில் ரஜினியுடன் பகத் பாசில், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்திற்கு கூலி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூட இந்த படத்தின் ரஜினி கெட்டப் குறித்த போட்டோ வெளியாகி கவனம் பெற்றது.

இதையும் படியுங்கள்:
புறநானூறு படத்தில் சூர்யாவிற்கு பதில் தனுஷா?
Lokesh Kanagaraj

இப்படத்தின் ஷூட்டிங் இம்மாதம் தொடங்க உள்ளது. அதிரடி ஆக்‌ஷன் திரைப்படமாக கூலி உருவாக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாம். இப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில், தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக கூலி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக கிரீஷ் கங்காதரன் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இதற்கு முன்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். அப்படத்திற்கு பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இதுவாகும். கிரீஷ் உடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு அவருடன் இணைவதை உறுதி செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

Lokesh & girish
Lokesh & girish

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com