மீண்டும் ஹீரோவாக களமிறங்கிய நடிகர் ஷாம்.. 90ஸ் ரசிகர்கள் குஷி!

நடிகர் ஷாம்
நடிகர் ஷாம்

நடிகர் ஷாம் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

90ஸ் ரசிகைகளின் மனதை கொள்ளை கொண்ட நடிகர்களுள் ஒருவர் தான் நடிகர் ஷாம். 12 பி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். தொடர்ந்து ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, அன்பே அன்பே, லேசா லேசா, கிரிவலம், இயற்கை ஏ.பி,சி,டி , தில்லாலங்கடி, மனதோடு மழைக்காலம், அகம் புறம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவின் சாக்லெட் பாய்களில் ஒருவராக இருந்த ஷாமுக்கு கொஞ்சம் கொஞ்சமாக திரைப்பட வாய்ப்புகள் குறைந்து வந்தன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாம் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 6 மெழுகுவர்த்திகள் படம் அவருக்கு நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்திற்காக உடல் எடையைக் குறைத்து கடின உழைப்பை செலுத்தி தனது நடிப்பிற்காக பாராட்டுக்களைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு விஜய் நடித்து வெளியான வாரிசு படத்தில் ஷாம் நடித்திருந்தார்.

பட வாய்ப்புகள் குறைந்தது குறித்து நடிகர் ஷாம் கடந்த ஆண்டு ஒரு நேர்க்காணல் ஒன்றில் பேசினார். அதில், என்ன நடந்தது என்று தெரியவில்லை ஆனால் நிச்சயமாக கம்பேக் கொடுப்பேன் என தெரிவித்திருந்தார்.

சொன்னதை செய்ததாக தற்போது நடிகர் ஷாம் மாஸாக ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது அவரது அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு அஸ்திரம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அரவிந்த் ராஜகோபால் இந்தப் படத்தை இயக்குகிறார். கே.எஸ் சுந்தர மூர்த்தி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இப்படம் குறித்தான கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com