மீண்டும் தமிழ் நடிகையுடன் ஜோடி போடும் ஷாருக்கான்... யார் தெரியுமா?

Shah Rukh Khan
Shah Rukh Khan

நடிகர் ஷாருக்கான் ஏற்கனவே முன்னணி நடிகை நயன்தாராவுடன் படம் நடித்த நிலையில், தற்போது மற்றொரு தமிழ் நடிகையுடன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலிவுட் திரையுலகில் அசைக்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் ஷாருக்கான். இவருடன் நடிப்பதற்கு ஏராளமான நடிகர், நடிகைகள் போட்டி போட்டு வருகின்றனர் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட ஷாருக்கானுக்கு கடந்த ஆண்டு பொற்காலம் என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த ஆண்டு மட்டும் ஷாருக்கான் நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளிவந்தன. அந்த மூன்று படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் சக்கைப்போடு போட்டு வசூலையும் வாரிக்குவித்தன. முதலாவதாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பதான் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டியது.

இதையடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திரைக்கு வந்தது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இமாலய சாதனை படைத்தது. ஜவான் படத்தின் வெற்றிக்கு பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஷாருக்கானின் டுங்கி திரைப்படம் ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்:
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி நிலை இதுதான்... அடுத்து வரும் அப்டேட்!
Shah Rukh Khan

டுங்கி திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. இப்படி ஒரே ஆண்டு மூன்று பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ஷாருக்கான், அடுத்ததாக கிங் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தவிர ஷாருக்கான் மற்றொரு படத்தில் கமிட் ஆகி இருப்பதாகவும், அப்படத்தை டுங்கி படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி தான் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தில், ஷாருக்கானுக்கு நடிகை சமந்தா தான் ஜோடி சேரவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே முன்னணி நடிகை நயன் தாராவுடன் ஜோடி போட்ட நிலையில், தற்பொது மேலும் ஒரு தமிழ் ஹீரோயினுடன் டூயட் பாடவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com