நடிகர் சித்தார்த்தின் அடுத்த பட அப்டேட் இதோ... ரசிகர்கள் உற்சாகம்!

Siddharth
Siddharth

நடிகர் சித்தார்த்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்’ படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸ் என்ற நிறுவனம் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான 'மாவீரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு சுமார் 50 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் மாவீரன் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் நடிகர் சித்தார்த் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் பிரபல முன்னணி முன்னணி நடிகை ஒருவர் நாயகி ஆக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் சித்தார்த் நடிக்கும் நாற்பதாவது படம் என்பதால் சித்தார்த் 40 என தற்போதைக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை ஸ்ரீகணேஷ் என்பவர் இயக்க உள்ளார் என்பதும் இவர் ஏற்கனவே 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் உள்ளிட்ட பட்ங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் என்றும் தற்போது ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய விஷால்... புது எழில் இவரா?
Siddharth

தமிழ் சினிமாவில் பாய்ஸ், ஆயுத எழுத்து, ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்றவர் நடிகர் சித்தார்த். ஏற்கனவே நடிகர் சித்தார்த்தின் சித்தா படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரது அடுத்த படத்தின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோன்று கமல் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் சித்தார்த் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அறிவிக்கப்பட்ட சித்தார்த் 40 படம் அவரின் கெரியரில் முக்கிய படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் க்ரைம் ஜேனர் மன்னரான ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நடிப்பது தான். இதே போன்று இந்த படமும், கொஞ்சம் டிராமாவாகவும், கொஞ்சம் டிராவலாகவும் இருக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com