Siddharth and Aditi Rao Hydari Marriage
Siddharth and Aditi Rao Hydari Marriage

சத்தமின்றி அதிதி ராவை கரம்பிடித்தார் சித்தார்த்... திருமணத்தில் முடிந்த காதல்!

Published on

பிரபல நடிகர் சித்தார்த் அவரது நீண்ட நாள் காதலியான நடிகை அதிதி ராவை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் சித்தார்த். ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான இவர் பாய்ஸ் படத்தில் நடிக்கும் போதே மேக்னா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி நான்கு ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்த 2007-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். பாய்ஸ் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் சித்தார்த். தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து விட்டார்.

மேக்னாவை பிரிந்த பின்னர் நடிகை சமந்தா மீது காதல் வயப்பட்ட சித்தார்த், அவருடன் நெருங்கி பழகி வந்தார். ஆனால் இந்த ஜோடி திருமணம் செய்யும் முன்னரே பிரேக் அப் செய்து பிரிந்துவிட்டனர். இதையடுத்து சினிமாவில் கவனம் செலுத்து வந்த சித்தார்த் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்:
கமலின் 'சத்யா' திரைப்பட ரீமேக்கில் நடிக்கும் அசோக் செல்வன்?
Siddharth and Aditi Rao Hydari Marriage

இந்த படத்தின் புரோமோஷன் பணிகளின் போதும், கர்நாடகாவில் பெரிய சர்ச்சையில் சிக்கினார். பலரும் இவருக்காக ஆதரவு குரல் கொடுத்தனர். இந்த நிலையில் சமீப காலமாகவே இவரும் நடிகை அதிதி ராவும் காதலித்து வருவதாகவும் பேச்சுக்கள் எழுந்து வந்தது. நடிகை அதிதி ராவ் `தமிழ், மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர். தமிழில் காற்று வெளியிடை படத்தில் அறிமுகமாகி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். தொடர்ந்து சைக்கோ, ஹே சினாமிகா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Siddharth and Aditi Rao Hydari Marriage
Siddharth and Aditi Rao Hydari Marriage

இருவரின் திருமண பேச்சுக்கள் குறித்த வதந்திகள் பரவி வந்த நிலையில், தற்போது இன்று சைலண்டாக இருவரும் திருமணம் செய்துள்ளனர். ஏற்கனவே நடிகை டாப்ஸி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துள்ள நிலையில், தற்போது இந்த ஜோடியும் சைலண்டாக திருமணம் செய்துள்ளனர். இவர்களது திருமணம் தெலங்கானாவில் உள்ள வனபர்த்தியில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இவர்களது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் தெரிகிறது. ஏன் பல ஜோடிகள் வெளியில் தெரியாமல் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறது. ஏற்கனவே முதல் திருமணம் தோல்வியில் முடிந்த நிலையில், 2வதாக திருமணம் செய்துள்ள நடிகர் சித்தார்த் - அதிதி ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com