கமலின் 'சத்யா' திரைப்பட ரீமேக்கில் நடிக்கும் அசோக் செல்வன்?

Kamal's sathya movie
Kamal's sathya movie

கமல்ஹாசனின் நடிப்பில் வெளிவந்து மிகச்சிறந்த வெற்றிப்படமாக அமைந்த ‘சத்யா’ திரைப்படம் மீண்டும் ரீமேக்காகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அப்படத்தில் நடிகர் அசோக் செல்வன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ரீமேக்கில் நடிகர் அசோக் செல்வன்?

'சூது கவ்வும்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி தற்போது பல நல்ல திரைக்கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் அசோக் செல்வன். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘சூது கவ்வும்’ இப்படத்தில் சைடு ரோலில் நடித்திருந்தார். அதன்பிறகு தெகிடி, சவாலே சமாளி, ஓ மை கடவுளே, ஹாஸ்டல், சில நேரங்களில் சில மனிதர்கள், போர் தொழில் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான 'ப்ளு ஸ்டார்' படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் ரசிகர்களின் நல்ல விமர்சனங்களை இவருக்குப்  பெற்றுத் தந்தது.

'போர் தொழில்' படமானது அசோக் செல்வனின் வெற்றி படங்களில் ஒன்றாகும். இப்படத்தில் சரத்குமார், சரத்பாபு, நிகிலா விமல் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக கடந்தாண்டு திரையில் வெளியாகி இருந்தது. இப்படத்தை ஒரு அறிமுக இயக்குனராக விக்னேஷ் ராஜா நடிகர் அசோக் செல்வனை வைத்து இயக்கினார். இதனையடுத்து மீண்டும் ஒருமுறை இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலை போடுவதற்கு இதுதான் காரணம்... அவரே சொன்ன தகவல்!
Kamal's sathya movie

கமலின் சத்யா ரீ மேக்:

கமல்ஹாசன் நடிப்பில் 1988ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் தான் சத்யா. இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நடிகை அமலா நடித்திருந்தார். இப்படத்தை ரஜினிகாந்த் நடித்த பாட்சா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கி இருந்தார். மேலும் இவர்களோடு இணைந்து நாசர், ராஜேஷ் கிட்டி, ஜனகராஜ், வடிவுக்கரசி, நடராஜன், ஆர் எஸ் சிவாஜி, கவிஞர் வாலி, ஆர் கணேஷ் என பல திரை நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடித்திருந்தனர். அதோடு இதனை கமலின் ‘ராஜ் கமல்’ பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்திருந்தது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இப்படமானது பெரியளவிலான வெற்றியை எட்டியது. மேலும் இது கமலின் திரைப்பயணத்தில் மறக்கமுடியாத ஒரு படமாகவும் மாறியது. இப்படி வசூலை அள்ளிக்குவித்த சத்யா திரைப்படம் தற்போது ரீ மேக்காக உள்ளது. இந்த படத்தை போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்க இருப்பதாகவும், கமல் கதாபாத்திரத்தில் அசோக் செல்வன் நடிக்க போவதாகவும் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com