குழந்தைகளை கொஞ்சும் சிம்பு... இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ!

Simbu
Simbu

தக்லைஃப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லியில் நடந்த போது குழந்தைகளுடன் சிம்பு எடுத்துகொண்ட புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து 35 வருடங்களுக்கு பிறகு கமல் 234 படத்தின் மூலம் இணைகிறார்கள். Thug life என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர் நடிக்கவுள்ளதாக சென்ற ஆண்டே செய்திகள் வந்தன. த்ரிஷா தனது கதாப்பாத்திரத்தில் நடித்து முடித்து விட்டதாக சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர். அந்த வகையில் முதலாவதாக தக்லைஃப் படத்திலிருந்து மலையாள நடிகர் துல்கர் சல்மான் விலகுவதாக செய்திகள் கசிந்தன. அவர் தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவிருக்கும் புறநானூறூ படம் உட்பட பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

ஆகையால், பிஸி லைனப்பில் உள்ள துல்கருக்கு தக்லைஃப் படத்தில் நடிக்கப் போதிய நாட்கள் இல்லாததால் படத்திலிருந்து விலகியதாகக் கூறப்பட்டது. அடுத்ததாக ஜெயம் ரவியும் படத்திலிருந்து விலகியதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து துல்கர் சல்மானுக்கு பதிலாக சிலம்பரசன் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகின. அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்புவின் வீடியோ புரோமோவை வெளியிட்டு உறுதி செய்தது படக்குழு. மாநாடு படத்திற்கு பிறகு தனது உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சிம்பு, பத்து தல படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் மாஸான லுக்கில் இடம்பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள்:
டைட்டிலா இது? தமிழ் பட தலைப்புகள் குறித்து வைரமுத்து ஆதங்கம்!
Simbu

சில வாரங்களுக்கு முன்பாக சிம்பு தொடர்பான வீடியோவை தக்லைஃப் படக் குழுவினர் வெளியிட்டிருந்தனர். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் இன்று கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவில் சிம்பு குழந்தைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இதனை பார்த்த சிம்பு ரசிகர்கள் தலைவா என கமெண்ட் செய்து வருகின்றனர். சிம்புவின் புது கெட்டப்பையும் வைரலாக்கி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com