மீண்டும் அப்பாவான சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan
Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

விஜேவாக இருந்து படிப்படியாக முன்னேறி உச்சநடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஆர்த்தி என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட சிவகார்த்திகேயன் தற்போது 3வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற போது ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் சீக்கிரமே 3வது குழந்தைக்கு அப்பாவாக போகிறார் என வாழ்த்த ஆரம்பித்தனர். இந்நிலையில், ஜூன் 2ம் தேதி அவருக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே முதல் குழந்தை ஆராதனா வாயாடி பெத்த புள்ள என்ற பாடல் பாடி பிரபலமானது. தொடர்ந்து 2வது மகனான குகனும் அயலான் பட ஆடியோ லாஞ்சில் மேடையில் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டினார். தற்போது 3வது குழந்தை பிறந்துள்ள நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
இணையும் கவின், நயன்தாரா... படத்தின் கதை இதுதானா?
Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் மனைவி ஆர்த்திக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆண் குழந்தை பிறந்துள்ளார். தாயும் சேயும் நலம் உங்களுடைய ஆதரவு எப்போதும் வேண்டும் என 3வது குழந்தைக்கு அப்பாவான சந்தோஷத்தை ஷேர் செய்துள்ளார். இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொள்ளாமல் போக காரணமும் இதுவாக இருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். விரைவில் 3வது குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com