இணையும் கவின், நயன்தாரா... படத்தின் கதை இதுதானா?

Kavin And Nayanthara
Kavin And Nayanthara

இளம் நடிகர் கவின் மற்றும் மூத்த நடிகை நயன்தாரா ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதேபோல் படத்தின் ஒன்லைனும் (Oneline) சினிமா வட்டாரத்திலிருந்து கசிந்துள்ளது.

கவின் தொடர்ந்து பல படங்களில் கம்மிட்டாகி வருகிறார். சின்னத்திரை நடிகராக அறிமுகமான இவர், பின்னர் வெள்ளித்திரையிலும் அறிமுகமானார். முதலில் இவருடைய இரண்டு மூன்று படங்கள் வந்ததும், போனதும் தெரியாமல் இருந்தன. அப்போது டாடா படமே இவரை பெரிய அளவில் தூக்கிவிட்டது. சாதாரண ரசிகர்கள் முதல், சினிமா ரசிகர்கள் வரை அனைவரையும் இப்படம் கவர்ந்தது. பல முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள் கூட தனிப்பட்ட முறையில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அதன்பின்னர் இவரின் படங்களுக்கும் எதிர்பார்ப்புகள் கூடின. அந்தவகையில் சமீபத்தில் வெளியான ஸ்டார் படம் விமர்சன ரீதியாக சற்று அடிவாங்கியது. ஆகையால், தொடக்கத்தில் இருந்த வசூல், போகப்போக குறைந்தது.

அடுத்து நடன இயக்குனரான சதீஷ் இயக்கும் கிஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார், கவின். அதைத்தொடர்ந்து நெல்சன் திலிப்குமார் தயாரிப்பில் சிவபாலன் இயக்கத்தில் Bloody Begger என்ற திரைப்படத்திலும் நடிக்கவிருக்கிறார். வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.

அந்தவகையில் தற்போது கவின் நயன்தாராவுடன் இணையவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நயன்தாரா சமீபக்காலமாக தன் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். ஆகையால், படங்களில் நடிப்பதை குறைத்து வருகிறார். அந்தவகையில் தற்போது கவினுடன் இணையவுள்ளார்.

இதையும் படியுங்கள்:
வேட்டையன் ரிலீஸ் தேதி என்ன... மாஸ் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!
Kavin And Nayanthara

அதற்கு காரணம், அப்படத்தின் இயக்குனர், விக்னேஷ் சிவனின் துணை இயக்குனர் விஷ்ணு எடவன் ஆவார். இவரின் முதல் படத்திலேயே கவின், நயன்தாரா, சத்யராஜ் போன்றோர் நடிக்கவுள்ளனர். அதேபோல், 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கவுள்ளது.

ஹீரோ சீனியர் பெண்ணை காதலிப்பது போல கதைக்களம் அமைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இந்தக் கதை பலமுறை எடுக்கப்பட்டிருந்தாலும், நயன்தாரா கவின் ஜோடி என்பதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. அதேபோல் படத்தின் நகர்வில் கவனம் செலுத்தி எடுத்தால், இது மெலோடியான லவ் மூவியாக இருக்கும். ஆனால், படம் வந்தப் பின்னரே தெரியும் எப்படி இருக்கிறது என்று. எதையும் கணிக்க முடியாதல்லவா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com