அயலான் ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. குஷியில் ரசிகர்கள்!

Ayalaan
Ayalaan

யலான் திரைப்படத்தில் ஒடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்று நேற்று நாளை படத்தின் இயக்குநர் R.ரவிக்குமார் இப்படத்தை இயக்கி உள்ளார்.வில்லனிடம் இருக்கும் ஒரு பொருளை கைப்பற்ற வேற்று கிரகத்தில் இருக்கும் ஒரு உயிரினம் (அயலான் ) பூமிக்கு அதுவும் சென்னைக்கு வருகிறது. நம்ம ஹீரோ இதற்கு அடைக்கலம் தந்து உதவுகிறார். வில்லன் அயலானை கடத்தி டார்ஜர் செய்கிறார்.நம்ம ஹீரோ அயலானை வழக்கம் போல் காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

இந்த படத்தில் கதாநாயகியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், யோகி பாபு மற்றும் கருணாகரன் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Ayalaan
Ayalaan

விவசாயம், பூமி பாதுகாப்பு போன்ற விஷயங்களை ஹீரோ தான் வழக்கம் போல் பேசுவார். இந்த படத்தில் அதனை வேற்று கிரகத்தில் இருந்து வரும் ஏலியன் பேசுகிறது. சையின்ஸ் பிக்சனாக உருவாகியுள்ள இந்த படம் ஃபேமில் எண்டெர்டெயின்மெண்டாக அமைந்துள்ளது. முதல் நாளே இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், இந்த படத்தின் ஒடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஏற்கனவே சன் நெக்ஸ்ட் நிறுவனம் அயலான் படத்தை வாங்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், வரும் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி படம் ஒடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:
96வது ஆஸ்கர் விருது பட்டியல்.. 13 பிரிவுகளில் ஓபன் ஹெய்மர்.. ரசிகர்கள் குஷி!
Ayalaan

இந்த படத்தில் ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. பெரிய படங்களுடன் போட்டியிட்ட அயலான், ஃபேமிலி ஆடியன்ஸை கவர்ந்து நல்ல வசூலை பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com