இயக்குனர் அவதாரம் எடுக்கும் சிவகார்த்திகேயன்... ஹீரோ இவரா?

Sivakarthikeyan
Sivakarthikeyan

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து வரும் நிலையில், விரைவில் அவர் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த இவர், கனா போன்ற நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரித்து வருகிறார். அதேபோல் முன்னணி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது கமல்ஹாசனின், ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்து ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

இதனிடையே காமெடி நடிகராக இருந்து வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதையின் நாயகனாக அறிமுகமான சூரி, தற்போது கருடன் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் மே 31-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், சூரி அடுத்து கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்:
இளையோரையும் எளியோரையும் ஏற்றம் பெறவைக்கும் ஏ.ஆர்.ரகுமான்!
Sivakarthikeyan

தற்போது கருடன் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் சூரி, சமீபத்தில் பங்கேற்ற நேர்காணல் ஒன்றில் இது குறித்து பேசியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சூரியிடம் கேள்வி கேட்கப்பட்டது, அதற்கு பதிலளித்த சூரி, நல்ல கதை ஒன்று உள்ளது அதை நீங்கள் செய்தால் சிறப்பாக இருக்கும் என்று சிவகார்த்திகேயன் தம்பி என்னிடம் கூறினார், நிச்சயம் நான் செய்வேன் நேரம் வரும்போது பண்ணலாம் என்று முன்பு நாங்கள் முடிவு செய்திருந்தோம். அவருக்கு எப்போது டைம் கிடைத்து கதை எல்லாம் ரெடியாகிறதோ அப்போது நிச்சயம் அவர் இயக்கத்தில் நான் நடிப்பேன், இப்போ கூட நான் ரெடி என்று நடிகர் சூரி பதிலளித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com