.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
.jpg?w=480&auto=format%2Ccompress&fit=max)
நடிகர் சிவகார்த்திகேயன், தனது 3வது மகனுக்கு பெயர் சூட்டியுள்ள நிலையில், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜேவாக இருந்து படிப்படியாக முன்னேறி உச்சநடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஆர்த்தி என்பவரை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட சிவகார்த்திகேயன் தற்போது 3வது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி சமீபத்தில் விழா ஒன்றில் பங்கேற்ற போது ஆர்த்தி கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்த ரசிகர்கள் சிவகார்த்திகேயன் சீக்கிரமே 3வது குழந்தைக்கு அப்பாவாக போகிறார் என வாழ்த்த ஆரம்பித்தனர்.
இந்நிலையில், ஜூன் 2ம் தேதி அவருக்கு மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஏற்கனவே முதல் குழந்தை ஆராதனா 'வாயாடி பெத்த புள்ள' என்ற பாடல் பாடி பிரபலமானது. தொடர்ந்து 2வது மகனான குகனும் அயலான் பட ஆடியோ லாஞ்சில் மேடையில் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டினார். தற்போது அவருக்கு 3வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இவர் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியான 'அயலான்' திரைப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில், ஏனோ எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. மேலும் இந்த படம் ரிலீசாக வேண்டும் என்பதற்காக, தன்னுடைய சம்பளப்பணமே வேண்டாம் என சிவகார்த்திகேயன் விட்டுக்கொடுத்து குறிப்பிடத்தக்கது. இந்த படம் தோல்வியை தழுவினாலும், இவர் நடித்துள்ள 'அமரன்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. காரணம் இப்படம் சென்னையை சேர்ந்த இராணுவ அதிகாரி 'Major Mukund Varadarajan' வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்னும் பெயரிடாத படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் 3வது மகனை தொட்டிலில் போடும் நிகழ்வு சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. அப்போது அவருக்கு பெயர் சூட்டும் விழாவும் நடத்தப்பட்டது. இதில் அவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். முதல் மகளுக்கு ஆராதனா என்றும், 2வது குழந்தைக்கு குகன் என்று பெயர் சூட்டி இருந்த நிலையில், தற்போது 3வது குழந்தைக்கு பவன் என பெயர் வைத்துள்ளார்.
மேலும் பெயர் வைக்கும் க்யூட் வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், உன் பிரசவ வலியை ஆபரேஷன் தியேட்டரில் அருகில் இருந்து பார்த்தவன் நான், இவ்வளவு வலிகளையும் தாங்கி அழகான குடும்பத்தையும் குழந்தைகளையும் சொந்தங்களையும் ஏற்படுத்தி கொண்ட உனக்கு என்றென்றும் கடமை பட்டிருக்கேன் ஆர்த்தி என மனைவிக்கு உருக்கமாக நன்றி கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.