லேடி கெட்டப்பில் கலக்கிய நடிகர் சிவக்குமார்.. இதை கவனிச்சிருக்கீங்களா?

சிவக்குமார் - கமல்ஹாசன்
சிவக்குமார் - கமல்ஹாசன்

முன்னணி நடிகரான சிவக்குமார், 80ஸ், 90ஸ் காலங்களில் அட்டகாசமான நடிகராக வலம் வந்தார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அச்சு அசலாக நடித்து கலக்கியவர் தான் சிவக்குமார். இவரின் நடிப்பு ஓய்ந்ததையடுத்து, தற்போது இவரின் 2 மகன்களான சூர்யாவும், கார்த்தியும் தற்போது நடிப்பில் அசத்தி வருகின்றனர்.

சினிமாவில் பெண் வேடமிடுவது அவ்வளவு சுலபமான விஷயம் கிடையாது. உடல் தோற்றம், பாவனை, நளினம், குரல் என முழுவதும் மெனக்கெட வேண்டும். அவ்வாறு, பெண் வேடமிட்டு ஏராளமான நடிகர்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். ஒரு பாடல், ஒரு சீன் என பல நடிகர்கள் நடித்திருந்தாலும் படம் முழுவதும் பெண் வேடமிட்டு பலரும் அசத்தியிருப்பார்கள். ரெமோ சிவகார்த்திகேயன், அவ்வை சண்முகி கமல்ஹாசன், அவன் இவன் விஷால் என பல நடிகர்கள் படம் முழுவதும் பெண் வேடமிட்டு பெண் குரலில் பேசியிருப்பார்கள். இதற்கு பல நாட்கள் பயிற்சி எடுத்ததாகவும், படம் முடிந்த பிறகு பெண்ணின் பாவனைகள் சில நாட்கள் தொடர்ந்ததாகவும் நிறைய நடிகர்கள் கூறியிருப்பார்கள்.

சிவக்குமார் - கமல்ஹாசன்
சிவக்குமார் - கமல்ஹாசன்

அந்த வகையில், பிரபல நடிகர் சிவகுமார் பெண்வேடமிட்டு லேடி கெட்டப்பில் நடித்து அசத்தி இருந்த திரைப்படத்தின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 1956 ஆம் ஆண்டு வெளியான 'காக்கும் கரங்கங்கள்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சிவகுமார். தனது முதல் படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் ரூ. 1000.

கடவுளாக, குடிகாரனாக என பல படங்களில் நடித்து ஹிட்டானார். கமல்ஹாசன் ஐயர் கெட்டப்பில் குடுமியுடன் இருக்க, சிவகுமார் மடிசார் மாமி கெட்டப்பில் சேலையில் அம்சமாக வெட்கப்பட்டுக் கொண்டு நிற்கும் அரிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
இந்த வைரம் இருந்தால் நீங்களே உலகின் சிறந்த பணக்காரர்!
சிவக்குமார் - கமல்ஹாசன்

தங்கத்திலே வைரம் படத்தில் சிவகுமாரும் கமலும் இணைந்து ஒரு பாடலில் ஆடி இருப்பார்கள். அப்போது சிவகுமார் போட்ட பெண் வேடம் தான் இந்த மடிசார் மாமி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com