ஜெயிலர் 2 திரைப்படம் தயாராகி வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ரசிகர்களின் பேவரைட் நடிகருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்.. அப்படி பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தனது அசத்தலான ஸ்டைல் மூலம் ரசிகர்களை கவர்ந்த அவர், தனது 72 வயதில் தற்போதும் படம் நடித்து அசத்தி வருகிறார்.
அப்படி அவர் வாழ்க்கையில் சமீபத்தில் ஹிட் அடித்த படம் என்றால் ஜெயிலர் படம் தான். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த போதே யார் சூப்பர் ஸ்டார் என்ற சர்ச்சை எழுந்தது. இப்படிப்பட்ட சர்ச்சைக்கு மத்தியில் வெளியான ஜெயிலர் படம் மாஸ் வெற்றி படைத்தது. இந்த படத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியாக அட்டகாசமான நடிப்பை ரஜினிகாந்த் வெளிப்படுத்தி இருந்தார். தந்தை மகனுக்கும் இருக்கும் உறவை அழகாக வெளிப்படுத்தியது இந்த படம். ரஜினிகாந்திற்கு மட்டுமல்ல இயக்குனர் நெல்சனுக்கும் இந்த படம் பெயர் வாங்கி கொடுத்தது என்றே சொல்லலாம். பீஸ்ட் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் கம்பேக்காக இருந்தது.
இந்த திரைப்படம் 650 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், விநாயகன், வசந்த் ரவி, சிவராஜ்குமார், மோகன்லால், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக அமைந்த இந்த படம் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது.
முதல் பாகம் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த பாகம் குறித்து அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இதனால் ரசிகர்கள் அதை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி வரும் எஸ்.ஜே.சூர்யா ரசிகர்களின் பேவரைடாக மாறிவிட்டார். இவர் நடித்தால் படம் நல்லா இருக்கும் என்ற அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார். மாஸ் நடிகரான ரஜினியுடன் இவரது கூட்டணி எப்படி இருக்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். அவர் இந்த படத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் தெரிகின்றன.