சர்தார் 2 வில் இணைந்த மாஸ் நடிகர்... ரசிகர்கள் குஷி!

Sardar 2
Sardar 2
Updated on

சர்தார் திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் வெளியான சர்தார் திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தீபாவளிக்கு தியேட்டர்களில் வெளியானது. இந்தப் படத்தில் கார்த்தி, அப்பா - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்து வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. அதுவும் ரசிகர்களின் பேவரைட் ஆன வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது. குஷி, வாலி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் தான் எஸ்.ஜே.சூர்யா. இயக்குனர் அவதாரம் எடுத்த எஸ்.ஜே.சூர்யா தற்போது படிப்படியாக முன்னேறி நல்ல நடிகர் என்று தாண்டி மாஸான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பேவரைட் இடத்தை பிடித்து விட்டார். மாநாடு, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஸ்பைடர் என பல படங்களில் தனது அட்டகாச நடிப்பால் ரசிகர்களின் மனதை பிடித்துவிட்டார். தற்போது பன்முக கலைஞராகவே மக்களிடம் அறியப்படுகிறார்.

Sj Surya
Sj Surya

சமீபத்தில் அனைத்து படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில் வெளியான இந்தியன் 2 படத்திலும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லனாக மிரட்டியிருப்பார். இந்த நிலையில் தற்போது சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்ற அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை படக்குழு புகைப்படம் வெளியிட்டு அறிவித்த நிலையில் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தொடர்ந்து தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. வரிசையாக வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி வரும் எஸ்.ஜே.சூர்யா அடுத்தடுத்து பல படங்களை கையில் குவித்து வைத்திருக்கிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com