"சோறு போட்ட தெய்வம் அவரு" கண்கலங்கிய வடிவேலு... வைரலாகும் பேட்டி!

Vadivelu Rajkiran
Vadivelu Rajkiran

நடிகர் வடிவேலு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிப்பில் பின்னி பெடலெடுத்த வடிவேலு தனது குரல் திறனாலும் மக்களை ஈர்த்தார். எட்டணா இருந்தா எட்டுறு போன்ற பாடல்கள் இன்றும் பிரபலம். புகழின் உச்சியில் இருந்த வைகைப்புயல் வடிவேலு சில பிரச்னைகள் காரணமாக தமிழ் சினிமாவில் நடிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டது. சில ஆண்டுகளாக சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

ஆனாலும் அந்த படம் பெரியளவில் ஓடாததால், தொடர்ந்து மாமன்னன் படம் மூலம் மீண்டும் உச்சம்பெற்றார். ஆனால் தனது நகைச்சுவை பாணியில் இருந்து தனித்துவமாக இந்த படத்தில் நடித்து பெயரெடுத்திருப்பார். சந்திரமுகி 2, மாரீசன் போன்ற படங்களில் நடித்தார். விஜயகாந்தின் மறைவில் அவர் பங்கேற்காததால் பல சர்ச்சை கருத்துகளுக்கு ஆளானார். இதையடுத்து, சமீபத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது ரசிகர்களை சிரிக்க வைத்தார். தொடர்ந்து வெங்கடேஷ் பட் எடுத்த சிறப்பு நேர்காணலில் பங்கேற்ற அவர் தனது மன குமுறல்களை பகிர்ந்தார். இந்த பேட்டி தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
விஜய் சேதுபதியின் மகாராஜா ட்ரைலர் வெளியீடு... எப்படி இருக்கு தெரியுமா?
Vadivelu Rajkiran

அதில், , கவுண்டமணி , செந்தில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த காலம் அது. மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் ராஜ்கிரணை சந்தித்த போது அவருக்கு நான் மோனோஆக்டிங் செய்து காட்டினேன். அதை பார்த்து என்னை மிகவும் பாராட்டிய அவர் சென்னைக்கு வாடா என்று என்னை அவருடன் அழைத்து வந்தார். எனக்கும் வாழ்க்கையில சோறு போட்ட தெய்வம்னா அது ராஜ்கிரண் தான். எங்க அம்மா அப்பாவுக்கு பிறகு அவர்தான். அவர் பெத்த பிள்ளைய போல அவரு ஆபிஸ்ல எனக்கு சோறு போட்டு பாத்துக்கிட்டாரு, கவுண்டமணி செந்தில் இருந்த காலத்துல அவரு தான் தமிழ் சினிமாவுல என்னை உள்ள விட்டாரு என்று கண்ணீர் மல்க பேசியிருப்பார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com