உதவியவர்களுக்கு நன்றி... நெகிழ்ச்சியுடன் நன்றி கூறிய நடிகர் வெங்கல் ராவ்!

Vengal Rao
Vengal Rao

வெங்கல் ராவ் தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

நடிகர் வடிவேலுவின் பல சூப்பர்ஹிட் காமெடி காட்சிகளில் நடித்த வெங்கல் ராவ் மருத்துவ செலவிற்காக மக்களின் உதவியை நாடி வீடியோ வெளியிட்டிருந்தார். செந்தில் - கவுண்டமணிக்கு பின்னர், ரசிகர்களை காமெடியால் கிச்சு கிச்சு மூட்டி சிரிக்க வைத்தவர் வடிவேலு தான். ஆனால் இவருடன் காமெடி செய்யும் நடிகர்களை கூட இவர் தான் தேர்வு செய்வார். அப்படி நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் காமெடியனாக நடித்திருப்பவர் வெங்கல் ராவ். சைக்கோ தலையில் வடிவேலு கைவைக்கும் காமெடி, தேங்காய் விலை காமெடி, கொரில்லா செல் காமெடி, நாய்க்கடி டாக்டர் காமெடி என அவர்கள் இணைந்து நடித்த காமெடிகள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனது. இப்படி பல காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை சிரிக்க வாய்த்த இவர், இன்று தன்னுடைய சிகிச்சைக்கு கூட பணம் இல்லை என வேதனையோடு பகிர்ந்துள்ள வீடியோ வைரலாகியது. இவருக்கு ஏற்கனவே உடல்நல பாதிப்பு இருந்த நிலையில், சமீபத்தில் வெங்கல் ராவின் ஒரு கை, ஒரு கால் செயல் இழந்து தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவ செலவிற்கு நடிகர்கள் மற்றும் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் தனக்கு உதவுமாறு பேச கூட முடியாத நிலையில் கேட்டுள்ளார். இவருக்கு கோலிவுட் பிரபலங்கள் உதவ வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஹீரோவான பிக்பாஸ் ராஜு... படம் பெயர் என்ன தெரியுமா?
Vengal Rao

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நடிகர் சிம்பு, கேபிஒய் பாலா, வடிவேலு உள்ளிட்ட பலர் பண உதவி செய்தனர். வெங்கல் ராவ் தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இதில், தனது மருத்துவச் செலவுக்காக பணம் கொடுத்து உதவிய ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு, பாலா உள்ளிட்டோரின் பெயரைக் குறிப்பிட்டு எல்லாருக்கும் வணக்கமும் நன்றியும் தெரிவித்துள்ளார். தன்னால் சரியாகப் பேச முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பிரபல காமெடி நடிகர் வெங்கல் ராவ் ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறார். ஆந்திராவை சேர்ந்த வெங்கல் ராவ் தமிழில் 30 வருடங்களுக்கு மேலாக பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக, வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com