விஜய்
விஜய்

பறந்து வந்த மாலையை கழுத்தில் போட்டு கொண்ட விஜய்.. குஷியில் ரசிகர்கள்!

புதுச்சேரியில் ஏஎஃப்டி பஞ்சாலையில் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் வந்ததையறிந்து குவிந்த ரசிகர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், சினிமாவில் இருந்து விலகுவதாக அரசியலில் களமிறங்கியதாகவும் அதற்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிட்டுள்ளதாகவும் அறிவித்தார். இவர் தற்போது வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து 69வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகுகிறார்.

இந்த நிலையில் இன்று கோட் பட ஷூட்டிங்கிற்காக புதுச்சேரி- கடலூர் சாலையிலுள்ள ஏஎஃப்டி பஞ்சாலைக்கு சென்ற நடிகர் விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இவர் அரசியலில் முழுமையாக குதித்த பிறகு ரசிகர்களை சந்திப்பது இதுவே முதன்முறை. வழக்கம் போல் கேரவன் மீது ஏறி நின்ற விஜய் ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார். மேலும், அவர்களுடன் வழக்கம் போல் செல்பி எடுத்து கொண்டார். அப்போது அங்கிருந்த ரசிகர்கள் மாலையை தூக்கி விஜய் கழுத்தில் எறிந்தனர். ஜஸ்ட் மிஸ்ஸில் கழுத்தில் இருந்து தவறிய மாலையை ரசிகர்களுக்காக கழுத்தில் போட்டு கொண்டு குஷிப்படுத்தினார்.

தொடர்ந்து மாலையை ரசிகர்களிடமே கொடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார்.இதையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இந்த வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் புடை சூழ்ந்ததால் புதுச்சேரியில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com