கிரிக்கெட் மைதானத்தில் சண்டை போடும் நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ!

கிரிக்கெட் மைதானத்தில் சண்டை போடும் நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ!
Published on

வாரிசு பட ஷூட்டிங்கின் போது நடிகர் விஜய் கிரிக்கெட் விளையாடிய வீடியோவை  பாடலாசிரியர்  விவேக் வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது விஜய் இயக்குனர் வெங்கட்பிரபுவுடன் கைக்கோர்த்து GOAT என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பான அப்டேட்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.

அப்படி தான் புத்தாண்டைமுன்னிட்டு படத்தின் டைட்டிலும், போஸ்டரும் வெளியானது. இதன் மூலம் விஜய் இரட்டை வேடம் என கூறப்பட்டது. படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் நிலையில், விஜய்யின் பழைய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வாரிசு படத்தில் விஜய் - ராஷ்மிகா நடித்து அசத்தியிருப்பார். குடும்ப கதையாக உருவான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், வாரிசு படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் கிரிக்கெட் களத்தில் தனது டீமுக்காக சண்டை போடும் வீடியோ ஒன்றை பாடலாராசிரியர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பேட்டிங் டீமுக்கு சப்போர்ட் செய்யும் நடிகர் விஜய், பேட்ஸ்மேன் அடித்த பந்தை அனைவரும் 4 என்று சொல்ல, அதை நடிகர் விஜய் மறுத்து இல்லை அது சிக்ஸ்.. சிக்ஸ்.. என்று வாக்குவாதம் செய்து தனது டீமுக்கு கைதட்டி சப்போர்ட் செய்யும் வீடியோ இணையத்தில் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அந்த கிரிக்கெட் களத்தில் நடிகர் விஜய், நடிகர் யோகிபாபு, இயக்குனர் வம்சி, நடிகை ரஷ்மிகா  மற்றும் படக்குழுவினர் உள்ளனர்.

இதே போன்று நடிகர் விஜய்யின் GOAT படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. கோட் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை கோவளத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்தப் படப்பிடிப்பின்போது ஏராளமான ரசிகர்கள் அவரை பார்க்க குவிந்தனர்.

அவரை சூழ்ந்துக் கொண்டு தளபதி என்று உற்சாகமாக முழக்கமிட்டனர். அப்போது அவர்களை பார்த்த விஜய் புன்னகையுடன் கையசைத்து சிரித்தபடி காரில் ஏறி சென்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com