மகாராஜா பட வெற்றியை தொடர்ந்து இயக்குனரை பாராட்டிய விஜய்..!

Vijay - Nithilan
Vijay - Nithilan

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

தந்தை மகள் உறவை அழகாக எடுத்துக்காட்டிய மகாராஜா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து இயக்குனர் நித்திலன் ஸ்வாமிநாதனை, நடிகர் விஜய் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகராக உலா வருபவர் விஜய் சேதுபதி. கதாநாயகன், வில்லன் என இரண்டு வேடங்களில் கலக்கி வருபவர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதியின் 50வது படம் மகாராஜா . இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் திரைப்படம் தான் மகாராஜா. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்த 50-வது படம் என்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது என்றே கூறலாம். படத்தில் நட்டி, முனிஷ்காந்த், அனுராக் காஷ்யப், பி.எல்.தேனப்பன், சிங்கம் புலி, பாரதிராஜா, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படம் ஜூன் 14ஆம் தேதி வெளியான நிலையில், நல்ல வரவேற்பை பெற்றுது. உலக அளவில் ரூபாய் 107 கோடியை வசூல் செய்துள்ளது என அறிவித்து இருக்கின்றனர். தந்தை, மகள் குறித்த கதை என்பதாலும் இந்த படம் சிறப்பு கவனம் பெற்றுள்ளது. பெண் பிள்ளைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதாலும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படக்குழுவுக்கு மேலும் ஒரு பாராட்டு கிடைத்துள்ளது. மகாராஜா படத்தின் இயக்குனர் நிதிலனை நேரில் அழைத்து நடிகர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ள நிதிலன், ‘மிக்க நன்றி விஜய் அண்ணா. மகாராஜா படம் பற்றி நீங்கள் விரிவாக பேசியது எனக்கு வியப்பு அளிக்கிறது. இதனை சிறந்த பாராட்டாக கருதுகிறேன். உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி அண்ணா. எனது தயாரிப்பாளர்கள் ஜெகதீஷ் மற்றும் சுதன் சுந்தரம் ஆகியோருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com