நடிகர் விஜய் 10th மார்க் இதுதான்... வைரலாகும் போட்டோ!

Actor Vijay
Actor Vijay

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு மார்க் ஷீட் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் கலக்கி வந்து கொண்டிருக்கிறார். தற்போது வருடத்திற்கு ஒரு படம் கொடுத்து வந்த விஜய், தற்போது அதற்கும் எண்ட் கார்ட் போட்டுள்ளார்.

அதாவது அரசியலில் நுழைவதால் இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என அறிவித்துவிட்டார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தற்போது நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாகவும் கூறிவிட்டார். சமீபத்தில் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், முழுநேரமாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. சினிமா பிரபலங்களின் மகன், மகளின் மார்க் விவரங்களும் வெளியாகி வைரலானது. இன்று 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்க் ஷீட் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
விவாகரத்து செய்யும் ஜி.வி பிரகாஷ் - சைந்தவி தம்பதி... ரசிகர்கள் ஷாக்!
Actor Vijay

நடிகர் விஜய்க்கு சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆசை பள்ளி பருவத்தில் இருந்தே இருந்ததாம், ஆனால் விஜயின் தந்தையும் இயக்குநருமான எஸ்.எ சந்திரசேகர் படிப்பை முடித்துவிட்டுதான் அதை பற்றி யோசிக்க வேண்டும் என்று ஸ்ட்ரிக்ட்டாக கூறிவிட்டாராம். இதனால் தனது படிப்பில் கவனம் செலுத்திய விஜய் 10 ஆம் வகுப்பு பொது தேர்வில் 1100க்கு அவர் 711 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதன் படி, தமிழில் 155/200, கணக்கில் 95/200, ஆங்கிலத்தில் 133/200, அறிவியல் 206/300, அறிவியல் பிராக்டிக்கல் 100க்கு 100, சமூக அறிவியல் 122/200 மதிப்பெண்களை பெற்றுள்ளார் விஜய். இதனை பார்த்த விஜய்யின் இளம் ரசிகர்கள், விஜய்யின் மார்க் லிஸ்டை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com