விஜய்யின் சூப்பர் ஹிட் படம் ரீ-ரிலீஸ்..! எப்போது தெரியுமா?

Sachin movie
Sachin movie

நடிகர் விஜய்யின் கில்லி படம் போல் அவரது பழைய படம் ஒன்று ரீ-ரிலீசாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் விஜய். விஜய்க்கு தமிழில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இப்படி கோடிகணக்கான மக்களின் அன்பை பெற்ற நடிகர் விஜய், திடீரென சினிமாவில் விலகுவதாக அறிவித்தார். மேலும் அரசியலில் எண்ட்ரி கொடுத்து தனது கட்சிக்கு 'தமிழக வெற்றிக்கழகம்' என பெயரிட்டுள்ளார். என்னதான் விஜய் அரசியலுக்கு வந்தாலும், திரையில் காணுவது இனி கிடையாது என்பது ரசிகர்களுக்கு பேரிடியாக தான் இருக்கும்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இன்னும் ஒரு படம் மட்டுமே நடிப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படம் குறித்த எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இது தான் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

சமீபகாலமாகவே புது படங்களின் வரவை விட பழைய படங்களின் ரீ-ரிலீஸ் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா காலகட்டத்தில் நீண்ட லாக்டவ்னுக்கு பிறகு திரையரங்கிற்கு வரும் மக்களின் கூட்டம் குறைவாக இருந்த காரணத்தினால் பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்தனர், இதனால் மக்கள் கூட்டம் மீண்டும் திரையரங்குகளை நோக்கி வர தொடங்கியது. தற்போது அதே போல் மீண்டும் பழைய படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான கில்லி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. கில்லி படம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின் வெளியான பிறகும் ரசிகர்கள் FDFS போல கில்லி படத்தை கொண்டாடினார்கள். ரீ-ரிலிஸ் செய்யப்பட்டு 30 கோடி வசூல் வேட்டை நடத்தியது கில்லி. தமிழ்நாட்டில் இத்தனை கோடி வசூல் செய்த முதல் ரீ-ரிலீஸ் படம் என்ற பெருமையை கில்லி திரைப்படம் பெற்றது.

இதையும் படியுங்கள்:
வெங்கட் பட்டின் 'டாப் குக்கு டூப் குக்கு' ஷோ... போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ!
Sachin movie

மே 1ஆம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்குகளில் அஜித் நடிப்பில் உருவான ‘தீனா’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. தொடர்ந்து விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜூலை 21 ஆம் தேதி விஜய், நயன்தாரா நடிப்பில் உருவான ‘வில்லு’ திரைப்பம் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ரசிகர்கள் எப்போதும் கொண்டாடி வரும் சச்சின் திரைப்படமும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு விஜய், ஜெனிலியா, வடிவேலு நடிப்பில் ‘சச்சின்’ திரைப்படம் வெளியானது. தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது.

இந்த படத்தையும் கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடி மகிழ்வர் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com