வந்தாச்சு விஷால் 34 அப்டேட்.. என்ன தெரியுமா?

actor vishal
actor vishalfiles.prokerala.com

நடிகர் விஷாலின் 34வது படத்தின் டைட்டில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஷால், சண்டைக்கோழி படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறினார். சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தில் நடிகர் விஷால் அட்டகாசமாக நடித்திருந்தார். டைம் ட்ராவல் கதை அம்சத்தை கொண்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. எஸ்.ஜே.சூர்யா, சில்க் ஸ்மிதா என படத்தில் அட்டகாசமான சிறப்பம்சங்கள் இருந்ததால் இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் 100 கோடியை கடந்துள்ளது.

மார்க் ஆண்டனி பட வெற்றியைத் தொடர்ந்து தனது 34வது படத்திற்காக ஹரியுடன் கூட்டணி வைத்துள்ளார் விஷால். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக கமிட்டாகி உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியிலும், அடுத்தகட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியிலும் நடந்து முடிந்தது.

'விஷால் 34' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் ஸ்டண்ட் இயக்குநராக சூப்பர் சுப்புராயன் பணியாற்றி வரும் நிலையில், கிளைமாக்ஸ் காட்சிக்காக கனல் கண்ணன் இப்படத்தில் இணைந்துள்ளார். இவர் இதற்கு முன் விஷாலுடன் சண்டக்கோழி, திமிரு, சத்யம் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றி இருக்கிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் வரும் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com